உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் மாஹே

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் மாஹே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலை கடற்படை பெற்றுக் கொண்டது. இந்த கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் 8 கப்பல்களில் முதலாவது இதுவாகும்.புதுச்சேரியின் வரலாற்று சிறப்பு மிக்க துறைமுக நகரமான மாஹேவை நினைவு கூறும் வகையில் இந்தக் கப்பலுக்கு அந்நகரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 78 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் 1,100 டன் எடையை தாங்கும். சக்திவாய்ந்த இந்த கப்பலில் நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட்கள், ரேடார்கள் நீருக்கடியில் இருக்கும் அபாயங்களை கண்டுபிடிக்கும் கருவிகள் உள்ளிட்டவை இந்த கப்பலில் உள்ளன. நீருக்கடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், நீருக்கடியில் இருக்கும் தனிமங்களை கண்டுபிடிக்கவும் இந்த கப்பல் பயன்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cyj7pqz7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தக் கப்பலில் உள்ள 80 சதவீத உபகரணங்கள் இந்தியாவிலேயே தயாரானவை. வடிவமைப்பு முதல், அனைத்து சாதனங்களும் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. தன்னிறைவு பாரதம் என்ற நிலை நோக்கி இந்தியா முன்னேறி வருவதை காட்டுகிறது. கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கப்பலை கடற்படை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.இந்த போர்க்கப்பல் விரைவில் சோதனைக்கு பிறகு கடற்படையில் இணைக்கப்படும். கடற்படை பணியில் ஈடுபடும் போது, கடற்படையின் பலம் இன்னும் வலிமை பெறும் என கடற்படை தெரிவித்துள்ளது. இது போன்று இன்னும் 7 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை விரைவில் கடற்படை வசம் ஒப்படைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

c.mohanraj raj
அக் 25, 2025 13:32

இந்தியாவில் குண்டு ஊசி கூட தயாரிக்க முடியாது என்று ஒரு கோமாளி சொல்லிக் கொண்டு திரிந்தான் அவன் இப்பொழுது இருந்திருந்தால் தூக்கு போட்டு இறந்திருப்பான்


KOVAIKARAN
அக் 24, 2025 21:56

இந்திய கடற்படைக்கும், இந்த வலிமையான நீர்முழ்கிக்கப்பலை எதிர்க்கும் கப்பலைக் கட்டிய கொச்சி கப்பல் கட்டும் தள நிர்வாகத்திற்கும் பாராட்டுக்கள். மீதமுள்ள இதைப்போன்ற 7 கப்பலைகளையும் விரைவில் கட்டிமுடித்து நமது இந்திய கற்படையினரிடம் விரைவில் ஒப்படைக்க வாழ்த்துக்கள்.


முக்கிய வீடியோ