உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேக் இன் இந்தியாவால் நல்ல பலன்: மத்திய அமைச்சர் நிர்மலா பெருமிதம்

மேக் இன் இந்தியாவால் நல்ல பலன்: மத்திய அமைச்சர் நிர்மலா பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ராஜ்யசபாவில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் கூறியதாவது:மேக் இன் இந்தியா திட்டம் உண்மையில் நல்ல பலன்களை தருகிறது. இதனால் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. ராணுவ தளவாட பொருட்களை இறக்குமதி செய்து வந்த நம் நாடு, இத்திட்டத்தால், தற்போது அவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது. இத்திட்டம் நாட்டின் தொழில் துறை மற்றும் ஏற்றுமதி திறன்களை வலுப்படுத்துகிறது.காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. அவற்றை நாங்கள் தற்போது சரிசெய்து வருகிறோம். மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை, அம்மாநிலத்தின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.அங்கு இயல்புநிலையை கொண்டுவர நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். மணிப்பூர் கலவரத்தில் எதிர்க்கட்சிகள் பழிசுமத்துவதை விட்டு விட்டு, அமைதி திரும்ப அரசுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

अप्पावी
மார் 19, 2025 15:30

சீன இறக்குமதி இல்லாம ஜீவிக்க முடியாது. கும்பமேளா க்ய்ளியல்.மடும்தான் மேக் இன் இந்தியா.


V. Kanagaraj
மார் 19, 2025 15:05

சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து நம்ம நாட்டின் ஸ்டிக்கர் ஒட்டினால் மேக் இந்த இந்தியாவா?


Ramesh Sargam
மார் 19, 2025 13:02

டாஸ்மாக் சரக்கு - made in தமிழ் நாடு. இதனால் தமிழ் நாட்டுக்கு அதிக பலன். மேலும் அதில் ஊழல் செய்த திமுகவினருக்கு மிக மிக அதிக பலன்.


Mecca Shivan
மார் 19, 2025 09:50

என்னவோ போ நாராயணா ..தினமும் வாய தொறந்தா தற்பெருமைதான் ..அவதிப்படுவது வியாபாரிகள் மற்றும் சிறு குறு தொழிற் நிறுவங்கள்தான் .. ஒருபுறம் குன்றிய அரசின் வசூல் வேட்டை இன்னொருபுறம் ஒன்றிய அரசின் மிரட்டல்.. fire லைசென்ஸ், fssai, லேபர் tax, professional tax, ஷாப் எஸ்டாபிளிஷ்மென்ட் trade லைசென்ஸ், gst, வருமான வரி PAN, ESI ..மாதாந்திர return வருடாந்திர return, ஆடிட்டர் fee, gst consultant பீஸ்... போதும்டா சாமி


Mario
மார் 19, 2025 09:31

யாருக்கு?


P. SRINIVASAN
மார் 19, 2025 09:21

வாயை தொறந்து பொய் ...


Rajarajan
மார் 19, 2025 07:16

எல்லாம் சரி. ஆனால், என்ன பயன் ? பொது மக்களுக்கு விலைவாசி உயரத்தானே செய்யுது. கஷ்டப்பட்டு, வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி அரசுக்கு வரி செலுத்தினா, உங்க சுயநல வோட்டு அரசியலுக்காக அதை நோகாம அரசு ஊழியருக்கும் / நஷ்டத்தில் மற்றும் தேவையற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியருக்கு தானே சம்பளம், சலுகை, ஊதிய உயர்வு, போனஸ், பஞ்சபடி, ஓய்வூதியம்னு வகை வகையா தாரை வார்க்கறீங்க. இதில் ஆண்ட கட்சி என்ன, ஆளும் கட்சி என்ன ? ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தானே. பிறகு இதில் என்ன பெருமை இருக்கிறது ? புக்காத்து பெருமையை, புகுந்த ஆத்தில் சொல்லி என்ன பயன் ?


Priyan Vadanad
மார் 19, 2025 07:11

பாராளுமன்றத்தில் நீங்கள் மக்களிடம் கறக்கும் வரிகளை உறுப்பினர்கள் சொல்லி அதனால் மக்கள் படும் கஷ்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்களே. அதுவும் மேக் இன் இந்தியாவா?


vivek
மார் 19, 2025 08:37

பிரியன்.. மேட் இன் டாஸ்மாக்...


சமீபத்திய செய்தி