உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: இந்தியாவுக்கு மாலத்தீவு ஆதரவு

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: இந்தியாவுக்கு மாலத்தீவு ஆதரவு

புதுடில்லி: இரு தரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் தலைமையிலான குழு வந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார்.தெற்காசிய நாடான மாலத்தீவு அதிபராக, 2023 நவம்பரில் பதவியேற்றார் சீன ஆதரவாளரான முகமது முய்சு. இந்திய சுற்றுலா குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறியது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, மாலத்தீவுக்கான சுற்றுலா பயண திட்டத்தை இந்தியர்கள் கைவிட்டனர்.இதனால், சுற்றுலாவே முக்கிய தொழிலாக உள்ள மாலத்தீவு கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு அக்டோபரில் இந்தியா வந்த முகமது முய்சு, இந்தியாவுடனான உறவை மீண்டும் தொடர விருப்பம் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, பொருளாதார மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவது தொடர்பான விரிவான திட்டம் உருவாக்கப்பட்டது. இவற்றை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க, மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் தலைமையிலான குழு, மூன்று நாள் பயணமாக டில்லிக்கு நேற்று வந்தது.நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, அப்துல்லா கலீல் சந்தித்து பேசினார். அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Padmasridharan
மே 27, 2025 13:46

மனம் ஒரு குரங்கு போல தாவி தாவி பேசுவார்கள் மாலத்தீவு நண்பர்கள்..


Kumar Kumzi
மே 27, 2025 13:24

இன்னும் நாற்பது ஐம்பது வருடங்களில் கடலில் மூழ்க போகும் நாட்டுக்கு ஆணவம் ஒரு கேடா அப்படி நடக்கும் போது சீனாக்காரன் இவனுங்களுக்கு அடைக்கலம் கொடுப்பானா அதா இநதியாவுக்கு ஜால்ரா போட வந்துருக்கானுங்க


V RAMASWAMY
மே 27, 2025 11:37

நம் நாட்டுக்கு உதவி கேட்டு வந்தால் ஒரு பேசிசு, அவர்கள் நாட்டுக்கு சென்று சீனாவை கட்டித்தழுவும்போது மற்றோரு பேசிசு, நம்பத்தகாதவர்கள்


Ramesh Sargam
மே 27, 2025 11:23

இந்தியாவின் உதவி மாலத்தீவுக்கு மிக மிக அவசியம். ஆகையால் இப்படி ஒரு ஜால்றா...


Yes your honor
மே 27, 2025 11:06

இந்தியா பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டிருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் உருவானதாலும், நேரு போன்ற அப்பட்ட சுயநலவாதிகளால் வழிநடத்தப்பட்டதாலும் காங்கிரஸாரிடம் அடிமைத்தனம் என்பது ரத்தத்தில் ஊறிவிட்டது. அது மத்திய அரசியலாகட்டும், அல்லது மாநில அரசியலாகட்டும், சுயசிந்தனையுடன், நாட்டுப்பற்றுடன் செயல்படவில்லை. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா ஊழலில் திளைத்ததால், இந்த உலகால் நமது நாடு மதிக்கப்படவில்லை. காங்கிரஸ்கால இந்தியாவின் நிலைப்பாடும், அதன் செயல்பாடுகளும் மண்டியிட்டு, கெஞ்சி, கூனிக்குறுகிக் கொண்டுதான் இருந்தது. திரு. மோடி ஜி அவர்களின் ஊழலற்ற, அறிவார்ந்த, தன்னலமற்ற அன்பு நிறைந்த ஆட்சி இந்த அவலக் காட்சிகளை மாற்றி அமைத்துவிட்டது இந்தியா எந்தளவிற்கு ஒரு சக்திவாய்ந்த நாடு என்பதை திரு. மோடி ஜி அவர்கள்தான் இந்த உலகிற்கு உரக்கச்சொல்லி, செயலிலும் காட்டி உள்ளார். இன்றைய, அதாவது, திரு. மோடி ஜி அவர்கள் தலைமையிலான இந்தியாவின் பலம் உலக நாடுகள் அனைத்தும் அறியும். நாம் கெஞ்சிய காலங்கள் கடந்துவிட்டன. விஞ்சி விட்டோம், விண்ணைத் தொட்டுவிட்டோம். அரிசி முதல் ஆயுதங்கள் வரை நம்மிடம் வாங்க பலநாடுகள் வரிசையில் காத்து நிற்கும் ஓர் அற்புதமான நிலைக்கு நம் தாய்த்திரு நாட்டை திரு. மோடி ஜி அவர்கள் கொண்டு சென்றுவிட்டார். திரு. மோடி ஜி அவர்கள் விஸ்வரூபம் எடுக்கும் தருணத்தில் பாக்கிஸ்தான் என்ன உலகிலுள்ள எந்த நாடும் அது டிரம்பாக இருந்தாலும் சரி, சாதாரண மாலத்தீவாக இருந்தாலும் சரி, இந்தியாவிடம் மண்டியிட்டுத்தான் ஆகவேண்டும். திரு. மோடி ஜி அவர்கள் உழல்வாதிகளுக்கும், திருடர்களுக்கு, கொள்ளையர்களுக்கு தான் எதிரியே தவிர எந்த ஓர் அன்பான இந்தியக் குடிமகனுக்கும் எதிரியல்ல. அறிவார்ந்த நல்லவர்கள் அனைவரும் திரு. மோடி ஜி அவர்களை விரும்புகிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள். சுயநல மூடர்களும், முட்டாள்களும்தான் திரு. மோடி ஜி அவர்களை எதிர்க்கிறார்கள்.


Ragupathi
மே 27, 2025 12:15

அருமையான உண்மையான கருத்து, நன்றி.


Kannan
மே 27, 2025 09:44

அப்படி வாங்க சார் வழிக்கு....ஜெய்ஹிந்த்..


Tetra
மே 27, 2025 09:38

எதுக்கு? இவன் ஆதரவு எப்படி உபயோகப்படும். தற்போதைக்கு நம்‌நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பணக்கடத்தலை மீண்டும் கொண்டு வரவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை