உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: உ.பி., முதல்வர் பெயரை சொல்ல சொல்லி சித்ரவதை

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: உ.பி., முதல்வர் பெயரை சொல்ல சொல்லி சித்ரவதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை குறிப்பிடும்படி, மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையினர் அடித்து சித்ரவதை செய்ததாக, அரசு தரப்பு சாட்சி ஒருவர் சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த தகவல் தெரிய வந்துள்ளது. மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008 செப்டம்பரில் குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; 101 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த போது, மாநிலத்தில் காங்., கூட்டணி ஆட்சியில் இருந்தது. https://www.youtube.com/embed/imiZ_g0k-f4'இந்த குண்டு வெடிப்புக்கு காவி பயங்கரவாதம் தான் காரணம்' என, அப்போது காங்., அரசு குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கில், பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினனட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட ஏழு பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர். முதலில், மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப்படை விசாரித்த நிலையில், பின், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு வழக்கு மாற்றப்பட்டது. 17 ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 31ல் தீர்ப்பு அளித்தது. துன்புறுத்தல் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசு தரப்பு தவறி விட்டதால், பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேரை விடுதலை செய்து, சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோதி தீர்ப்பளித்தார். 1,000 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் முழு விபரம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. விசாரணையின் போது, சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியான மிலிந்த் ஜோஷிராவ் என்பவர் அளித்த வாக்குமூலம்: என்னை குற்றவாளி போல பயங்கரவாத தடுப்பு படையினர் நடத்தினர். அவர்களது அலுவலகத்தில் ஏழு நாட்கள் என்னை அடைத்து வைத்தனர். இந்த வழக்கில், யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் அசிமானந்த், இந்திரேஷ் குமார், பேராசிரியர் தேவ்தர், சாத்வி, காகாஜி ஆகியோரின் பெயரை குறிப்பிடும்படி, என்னை அடித்து சித்ரவதை செய்தனர். அவர்களது பெயரை சொன்னால் வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் கூறினர். ஆனால் நான் மறுத்தேன். இதனால் ஆத்திரமடைந்த அப்போதைய போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீராவ், பரம் பீர் சிங் ஆகியோர், என்னை அடித்து துன்புறுத்தினர். இவ்வாறு அவர் கூறினார். நிராகரிப்பு நீதிமன்றத்தில், மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையினர் தாக்கல் செய்த அறிக்கையில், மிலிந்த் ஜோஷிராவின் வாக்குமூலம் வேறு மாதிரியாக இருந்தது. ஆனால், அவர் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நடந்ததை நீதிபதியிடம் கூறினார். இதன் மூலம், பயங்கரவாத தடுப்புப் படையின் முகமூடி கிழிக்கப்பட்டது. இதை பதிவு செய்த சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோதி, தன்னிச்சையாக வற்புறுத்தி அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை ஏற்க முடியாது எனக்கூறி நிராகரித்தார். முன்னதாக, இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யும்படி அழுத்தம் கொடுத்ததாக, விசாரணை பிரிவில் இருந்த பயங்கரவாத தடுப்புப்படை முன்னாள் அதிகாரி மெஹ்பூப் முஜாவார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஆக 03, 2025 18:28

அந்த சாட்சி சொன்னதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்றால் அவ்வாறு மிரட்டிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் உத்தரவு இடவில்லை? அதை நம்பகத்தன்மையற்றது என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை!


Barakat Ali
ஆக 03, 2025 14:15

மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை ....... ஏன், தலையெடுக்க வாய்ப்பேயில்லை ....


Santhakumar Srinivasalu
ஆக 03, 2025 10:55

காங்கிரஸ் ரவுடிகள் மோகன் பகாவத்துக்கு அப்புறம் உபி ஆதித்நாத் மீது குறி வைத்து கேவலப் பட்டிருக்கிறார்கள்


பேசும் தமிழன்
ஆக 03, 2025 10:37

எல்லாம் நம்ம இத்தாலி போலி காந்தி குடும்பம் தான் காரணம்.... அதோடு நம்ம காரைக்குடி ப சி..... முக்கிய காரணம்.... அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் அவர் தான்.


Kasimani Baskaran
ஆக 03, 2025 07:42

சி செட்டியார் அவரது வெளிநாட்டு முதலாளிகளுக்கு இணையான கிரிமினல் மூளையுள்ளவர். மோடிக்கு எதிராக செயல்பட்ட கேடியை வெளியே விட்டு வைத்து நாங்கள் சாதுக்கள் என்று மோடி நிரூபித்து விட்டார். இன்னும் கூட காலம் கடந்துவிடவில்லை - இது போன்ற தீவிரவாத சிந்தனையுள்ளவர்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இல்லை என்றால் இந்துக்கள் நிம்மதியாக வாழ வழியில்லை.


அப்பாவி
ஆக 03, 2025 07:31

அது சரி... குற்றவாளின்னு ஒரு ஆளையாவது புடிச்சு தண்டனை வாங்கித்தர துப்பிருக்கா? நம்ம போலீஸ் துப்பறியும்.லட்சணம் அவ்ளோதான். அப்படியே கஷ்டபட்டு புடிச்சிட்டு வந்தால் நீதிமன்றங்கள் 17 வருஷம் கழுச்சு கேசையே நறந்து போன நிலையில் எல்லோரையும் விடுதகை செஞ்சுரும். இவிங்க அநியாயத்துக்கு, திருநெல்வேலி பழிக்குப் பழி கொலைகளே தேவலை. நிச்சயம் தண்டனை கிடைக்கும். முப்பது வருஷம் கழிச்சாலும் அரிவாள் வெட்டு நிச்சயம். எப்புடிற்றான் புடிச்சு போட்டுத் தள்றாங்களோ?


லிங்கம், கோவை
ஆக 03, 2025 05:17

காங்கிரஸ் அரசு எவ்வளவு கொடூரமான அரசு என்பதற்கும் அது எந்த அளவுக்கு இந்து மதத்தை வெறுத்தது என்பதற்கும் இது ஒரு சாட்சி. குறிப்பாக பா சிதம்பரம் இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை புதிதாக ஏற்படுத்தி அதை சமூகத்தில் கட்டமைக்க முயன்றார். இத்தகைய இந்து விரோத காங்கிரஸை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை ஓட்டுகாக திருப்தி படுத்த எந்தவிதமான எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள். ஒரு உண்மையான இந்துவின் ஓட்டு கூட காங்கிரசுக்கு செல்லக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை