உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்தா போட்ட உத்தரவு; ஹிருத்திக் ரோஷன் பட வசூல் பாதிப்பு

மம்தா போட்ட உத்தரவு; ஹிருத்திக் ரோஷன் பட வசூல் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மொழியை வைத்து தமிழக அரசு அரசியல் செய்யும் யுக்தியை, தற்போது பல மாநிலங்களும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன.'பெங்காலி மொழி பேசும் சிறுபான்மையினரை வங்கதேசத்தவர் என, பா.ஜ., ஆளும் மாநிலங்கள் கைது செய்கின்றன' என, மேற்கு வங்க முதல்வரான திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி வருகிறார்.பெங்காலி மொழிக்காக இப்போது ஒரு உத்தரவிட்டுள்ளார். 'மேற்கு வங்கத்தில் உள்ள, அனைத்து சினிமா தியேட்டர்களிலும், தினமும் ஒரு பெங்காலி திரைப்படம் கட்டாயம் திரையிடப்பட வேண்டும். அதுவும் மதியம் 3:00 முதல் இரவு 9:00 வரை நடக்கும் ஒரு ஷோவில், பெங்காலி படம் திரையிடப்பட வேண்டும்' எனவும் அரசு ஆணையிட்டுள்ளது.'ஆனால், இப்படி தினமும் அதுவும், 'பீக்' நேரத்தில், பெங்காலி படம் திரையிட்டால், தியேட்டரில் கூட்டமே இருக்காது; நஷ்டம் தான் ஏற்படும்' என, திரைப்பட சங்கத்தினர் சொல்கின்றனர். ஆனால், தன் உத்தரவில் உறுதியாக உள்ளார் மம்தா.இதனால், இரண்டு திரைப்படங்களுக்கிடையே பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒன்று, பெங்காலி திரைப்படம், துாம்கேது இன்னொன்று ஹிந்தி திரைப்படமான, ஹிருத்திக் ரோஷன்- - கியாரா அத்வானி நடித்த, வார் 2 இந்த இரண்டு படங்களும் 14ம் தேதி ரிலீஸ் ஆனது.ஹிருத்திக் ரோஷன் நடித்த படத்தை திரையிட, அதிக அளவில் தியேட்டர்கள், 'புக்' செய்யப்பட்டுள்ள நிலையில், மம்தாவின் உத்தரவு, வார் 2 படத்தை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. பெங்காலி திரையுலகமோ, மம்தாவின் உத்தரவை வரவேற்றுள்ளது. இந்த உத்தரவால், ஹிருத்திக் ரோஷனின் பட வசூல் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajasekar Jayaraman
ஆக 17, 2025 14:07

வங்கதேசத்து மக்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்று இந்த முறை கிடைத்தது மொழி அவர் எதிர்பார்ப்பது கண்டிப்பாக நடக்காது.


நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2025 13:13

indi கூட்டணி போன்றவர்களுக்கு ஒரு பெரிய fertilizer போல


ஆரூர் ரங்
ஆக 17, 2025 09:28

ஒரு காலத்தில் தமிழகத்திலேயே ஆண்டுக்கு 13 வாரங்கள் கட்டாயம் தமிழ்ப் படங்களைத் திரையிட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கமல், ரஜனி, இளையராஜா, ரஹ்மான் உச்சத்திற்கு வந்த பிறகு இவ்விதி நீக்கப்பட்டுவிட்டது. பிறகு சென்னைக்கு வெளியே ஹிந்திப் படங்களை வெளியிட அரங்கங்கள் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. பான் இந்தியா படங்கள் இதன் தேவையை அகற்றி விட்டன. ஆக வங்காளப் படங்களின் உற்பத்தி தரத்தை உயர்த்துவதே தீர்வு.


Sun
ஆக 17, 2025 09:18

ஒரு காலத்தில் கல்கத்தா இந்தியாவின் தலைநகராக இருந்தது. மார்க்சிஸ்ட் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காள வளர்ச்சி அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. மார்க்சிஸ்ட் ஆட்சியிலாவது ஓட்டு வங்கி அரசியல் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. மம்தா ஓட்டு வங்கிக்காக எதையும் செய்யும் நிலைக்கு வந்து விட்டார். தேச நலனை பற்றி நினைப்பதே இல்லை. தனது அரசு இந்தியாவில்தான் இருக்கிறது என்ற நினைப்பு கூட அவருக்கு உள்ளதா? என்பது தெரியவில்லை. இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது.


ராமகிருஷ்ணன்
ஆக 17, 2025 09:12

கட்டுமரம் இவர்களை அப்போதைய மத்திய அரசு கூட்டு களவாணியாக வைத்து கொண்டு சுருட்டி முழுங்கி ஊழல்களில் திளைத்து வந்தனர், பிரிவினை மொழி விஷத்தை கவனிக்கவில்லை.


தத்வமசி
ஆக 17, 2025 09:10

மொழிப் பற்று கட்டாயம் இருக்க வேண்டும். அனால் அதை தூண்டி விட்டு குளிர் காயும் அரசியல்வாதிகளை மக்கள் ஒதுக்க வேண்டும். இது இந்தியாவில் பிரிவினை மனப்பான்மையை ஏற்படுத்தும். ஒரே இந்தியா - இந்தியா ஒரு நாடு என்கிற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டும். அப்படியென்றால் மாநிலத் தலைவர்களைக் கொண்ட கட்சிகளை தேசிய கட்சியாக அங்கீகாரம் செய்யக் கூடாது. அவர்களை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 17, 2025 08:50

மொழி வெறியை தூண்டி பிரிவினை விதை தூவும் போதே ஆண்ட அரசும் ஆளுகின்ற அரசும் தடுத்து அடக்கியிருக்க வேண்டும் அதை விடுத்து இதை பொருட்படுத்தாமல் விட்டதன் பலன் புற்றுநோய் போல் நாடு முழுக்க பரவ ஆரம்பித்து விட்டது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் தவிர்த்தால் பிராந்திய வகையில் பிரிவினை தலைதூக்கும் தமிழ் தேசியம் என்பது போல்... பின் சோவியத் ரஷ்யாவை போல் மாகாணங்களாக பிரிய வழிவகுக்கும்.. எதிரி நாட்டவர்களும் இதை தான் விரும்புவர்.. பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டு இவ்விதமான விவகாரங்களை கண்டும் காணாமல் விட்டால் அழிவு நாட்டிற்கு தான்.. ஆதலால் கடுமையான நடவடிக்கை மூலம் தீர்வு காணவேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் விருப்பமாகும்.


krishnamurthy
ஆக 17, 2025 08:12

தேவையில்லை உத்தரவு .


A viswanathan
ஆக 17, 2025 18:58

சுய நலத்திற்காக நாட்டை குட்டி சுவர் ஆக்குவேன் என்றால் ஒன்றும் செய்ய முடியாது அவர் ஆட்சியில் இருக்கும் வரை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை