உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முஸ்லிம் அமைப்புகளுக்கு பணிந்தார் மம்தா: மேற்கு வங்க உருது அகாடமி நிகழ்ச்சி ரத்து

முஸ்லிம் அமைப்புகளுக்கு பணிந்தார் மம்தா: மேற்கு வங்க உருது அகாடமி நிகழ்ச்சி ரத்து

கொல்கட்டா: மே ற்கு வங்கத்தில், அரசு சார்பில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில், பிரபல திரைக்கதை எழுத்தாளரும், கவிஞருமான ஜாவேத் அக்தர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதற்கு, முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்நிகழ்ச்சியை மாநில அரசு ரத்து செய்தது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்தாண்டு ஏப்ரலில் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், இந்திய சினிமாவில் உருது மொழியின் பங்களிப்பை கொண்டாடும் வகையில், தலைநகர் கொல்கட்டாவில், ஆக., 31 - செப்., 3 வரை, மேற்கு வங்க அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், மேற்கு வங்க உருது அகாடமி சார்பில், இலக்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று நடக்கவிருந்த முக்கிய நிகழ்ச்சிக்கு, பாலிவுட் திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் கவிஞரான ஜாவேத் அக்தர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு, கொல்கட்டாவில் உள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்புகளான ஜாமி யத் உலமா- - இ- - ஹிந்த், மற்றும் வஹ்யாஹின் அறக்கட்டளை கடும் எ திர்ப்பு தெரிவித்தன. 'மதம் மற்றும் கடவுளுக்கு எதிராக பேசக்கூடியவர் ஜாவேத் அக்தர். இலக்கிய விழாவுக்கு அவரை அழைத்தது தவறு. சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்' என, இரு அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து, கவிஞர் ஜாவேத் அக்தர் பங்கேற்கவிருந்த இலக்கிய நிகழ்ச்சியை, மேற்கு வங்க உருது அகாடமி ரத்து செய்தது. இது குறித்து அகாடமியின் செயலர் நுஸ்ரத் ஜைனப் கூறுகையில், ''தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், இலக்கிய நிகழ்ச்சி ரத்து செய்யப் படுகிறது,'' என்றார். எனினும் காரணங்களை அவர் குறிப்பிடவில்லை. முஸ்லிம் அமைப்புகளின் எச்சரிக்கைக்கு அடிபணிந்து, இலக்கிய நிகழ்ச்சியை மேற்கு வங்க அரசு ரத்து செய்துள்ளது, அம்மா நில அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
செப் 02, 2025 08:17

பெரும்பான்மை மக்கள் விழித்துக்கொண்டால் அவர்களது நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது .....


Svs Yaadum oore
செப் 02, 2025 06:54

ஜாவேத் அக்தர் அழைப்பிற்கு முக்கிய இஸ்லாமிய அமைப்புகளான ஜாமி யத் உலமா- - இ- - ஹிந்த், மற்றும் வஹ்யாஹின் அறக்கட்டளை கடும் எதிர்ப்பு தெரிவித்தனவாம் .....இந்த அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து திராவிட விடியல் முதல்வர் மேற்கு வங்க முதல்வருக்கு கடிதம் எழுதுவார்.. இதுபற்றி விரிவாக விவாதிக்க அணைத்து மாநில முதல்வர் கூட்டம் நடத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக விடியல் முதல்வர் தீர்மானம் நிறைவேற்றுவார் ...


Svs Yaadum oore
செப் 02, 2025 06:47

இப்படி கேவலப்படுவதற்கு பதில் இது பங்களாதேஷுக்கு சென்று அங்கு பிரதமர் ஆகி விடலாம் ...வெறும் பணம் பதவிக்கு வோட்டு பொறுக்குபவர்கள் நிலைமை இப்படித்தான் ஆகும் ...


நிக்கோல்தாம்சன்
செப் 02, 2025 04:09

எங்கே திராவிட கழகத்தினர் , தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் மூச்சாவை குடிக்குமாறு திரு ஜாவேத் அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார்


Ramesh Sargam
செப் 02, 2025 03:54

முஸ்லீம் அமைப்புகள் அல்ல, வாக்கு வங்கிகள்.


Natarajan Ramanathan
செப் 02, 2025 02:09

மதம் மற்றும் கடவுளுக்கு எதிராக பேசக்கூடியவர் ஜாவேத் அக்தர் என்பதால் நிகழ்ச்சியே ரத்து செய்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் வன்னியரசு போன்ற நாத்திகனை கூப்பிட்டு இசுலாமியர்கள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.


உண்மை கசக்கும்
செப் 02, 2025 01:59

வாக்கு வங்கிக்கு பயந்த மமதை மம்தா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை