உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டி கூட்டணியில் மம்தாவை தலைவராக்க பெருகுகிறது ஆதரவு

இண்டி கூட்டணியில் மம்தாவை தலைவராக்க பெருகுகிறது ஆதரவு

புதுடில்லி : எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணிக்கு தலைமை ஏற்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது. காங்கிரசின் முக்கியத்துவத்தை குறைக்கும் இந்த முயற்சி, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.லோக்சபாவுக்கு இந்தஆண்டு நடந்த தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணியை ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகள் நடந்தன. அதையடுத்து, 18 எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி உருவானது. இதில், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிரிவு, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு, தி.மு.க., ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்று உள்ளன.லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததற்கு, இண்டி கூட்டணியின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம். காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றதை அடுத்து, ராகுல் எதிர்க்கட்சி தலைவரானார். ஆனால், ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் தோல்வி அடைந்தது. அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளும் தோல்வி அடைந்தன.இதனால், ராகுல் தலைமை மீது நம்பிக்கை சரிந்தது. பார்லிமென்டில் மோடி- -- அதானி விவகாரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, ராகுல் தலைமையில் தொடர் போராட்டம் நடப்பதும் இண்டி கூட்டணி கட்சிகளுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. வேறு எந்த பிரச்னை குறித்தும் பேச முடியவில்லை என, திரிணமுல் காங்கிரஸ் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தது. ''கூட்டணி என்றால் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். வாய்ப்பு வந்தால், கூட்டணியை வழிநடத்த நான் தயார்,'' என, மம்தா தெரிவித்தார். அவர் கொளுத்தி போட்டது, தற்போது சரவெடியாக மாறியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், 'கூட்டணி தலைவராகும் தகுதி மம்தாவுக்கு உண்டு' என்றார். சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அதை ஆமோதித்தார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் களம் இறங்கினார். ''கூட்டணி தலைமையை மம்தா ஏற்க வேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு எதுவும் செய்யாது. மம்தாவுக்கு எங்கள் ஆதரவு உள்ளது,'' என்று கூறியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், ராகுலை தவிர இன்னொருவர் தலைமையை ஏற்க கூட்டணியில் எத்தனை கட்சிகள் சம்மதிக்கும் என்ற கேள்வி, குழப்பத்தை உருவாக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசுக்கு பரம எதிரிகளாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், கூட்டணியில் மம்தா தலைமையை ஏற்குமா என்ற கேள்வி மிரட்டுகிறது. காங்கிரஸ் தலைமையை ஏற்றுக் கொண்ட தி.மு.க.,வும், மாநில கட்சியின் தலைவரான மம்தா தலைமையை ஏற்குமா என்பதும் சந்தேகம். ராகுலின் தன்னிச்சையான செயல்பாடு, இண்டி கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியிருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது என, சில மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

ஸ்டாலின் முடிவு என்ன?

'இண்டி' கூட்டணிக்கு தலைமை தாங்க தயாராக இருப்பதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவித்ததை, கூட்டணியில் உள்ள பல கட்சிகள் வரவேற்றுள்ளன.இந்த நிலையில், இண்டி கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராகுல், மம்தா ஆகிய இருவருக்கும் நெருக்கமானவராக கருதப்படுவதால் ஸ்டாலின் எடுக்கும் நிலை என்ன என்பதில், பலரது கவனமும் திரும்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Anbunathan S
டிச 12, 2024 13:58

எங்க சித்து விளையாட்டு ஆரம்பம்.


shanmugamg
டிச 11, 2024 20:24

சந்திரசேகர் ராவ்... ஆகாமல் இருந்தால் சரிதான்


பேசும் தமிழன்
டிச 11, 2024 18:52

இண்டி கூட்டணிக்கு தலைமையேற்க நம்ம விடியல் தலைவர் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார் ....ஆனால் இந்தி தெரியாது போடா என்று சொன்னால்..... வடக்கே யாரும் ஓட்டு போட மாட்டார்களே.... அது தான்..... யோசிக்கிறார்.


MADHAVAN
டிச 11, 2024 17:59

முதலில் பீ சப்பி - சிவசேனா உங்க கூட்டணி என்ன ஆகுதுன்னு பாருங்க., முதல்வரை தேர்ந்தெடுக்க 12 நாளு, மந்திரி பதவிக்கு இன்னும் 15 நாளுன்னு அங்க எல்லாம் அடிச்சுக்கிறாங்க...


krishna
டிச 11, 2024 19:52

EERA VENGAAYAM MADHAVAN INDHIAVIN VALIMAYAANA NO 1 KATCHI BJP.DESA VIRODHA HINDHU VIRODHA MAFIA KUMBAL I.N.D.I KOOTANI.VEKKAME ILLAMA INDHA KEVALA KUMBALUKKU MUTTU KODUKKARA.


Suppan
டிச 11, 2024 17:03

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதுரி ஒரு பெட்டியில் கூறியது " நாங்க பெட்டி வந்த பிறகு அதானி அம்பானி கூப்பாடை நிறுத்தி விடுவோம்" . இதுதான் நிஜம். அதான் ரவுல் வின்சியும் அதானி அதானி என்று தூக்கத்தில் கூட உளறுகிறார். பாவம் .


krishna
டிச 11, 2024 14:49

ENGE OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN ADHAAN 200 ROOVAA COOLIE KOMALI UDAN VANDHU THUNDU SEATTU INDI KOOTANI THALA ENA KADHARAVUM.


MADHAVAN
டிச 12, 2024 11:23

யோக்கியதையை பாரு


krishna
டிச 11, 2024 14:49

ENGE OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN ADHAAN 200 ROOVAA COOLIE KOMALI UDAN VANDHU THUNDU SEATTU INDI KOOTANI THALA ENA KADHARAVUM.


ஆரூர் ரங்
டிச 11, 2024 12:26

கவுல் பிராமணருக்கு பதிலா வங்காள பிராமணர்? ஈர வெங்காயத்துக்கு அஞ்சலி.


Suppan
டிச 11, 2024 17:04

ஈர் வெங்காய கும்பலுக்கு தமிழக பிராமனர்கள்தானே பிடிக்காது. மற்ற மாநிலங்கள் ஓ கே


angbu ganesh
டிச 11, 2024 09:44

பிஜேபி இருக்கறதாலதான் இப்படி கமெண்ட் பண்ண மத்த ஆட்சி இருந்த இம்மென்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்டி, ஹிந்துக்கள் எல்லாம் இந்தியாவை விட்டு தொறத்திட்டு இன்னொரு பாகிஸ்தானோ இல்ல இன்னொரு இத்தாலியோதான் நம்ம பூமி ஓஹோ அவனா நீ


Nethiadi
டிச 11, 2024 09:13

எப்படியோ இந்த ஆட்சியோட இந்த சங்பரிவாளர் RSS கைக்கூலி பிஜேபி ஆட்சி தொலைஞ்சா சரி.


ராமகிருஷ்ணன்
டிச 11, 2024 10:28

பப்புக்கு பதிலா ரவுடி மம்மு, இண்டி கூட்டணி முழுசா புட்டுக்கும், தனிமை பட்ட காங்கிரஸ் தானே ஒழிந்து விடும்.


N Sasikumar Yadhav
டிச 11, 2024 11:37

சீனக்கைக்கூலிகளான உங்க என்னம் எப்போதும் பலிக்காது . பாரதியஜனதா ஆட்சியால்தான் பாரதநாடு பாதுகாப்பாகவும் வளர்ச்சியடைந்த நாடாகவும் உருவாகிறது . நகர்ப்புற நக்சலைட்டுகளின் என்னம் எப்போதும் நிறைவேறாது


Duruvesan
டிச 11, 2024 14:05

என்ன அமைதி ரொம்ப எரியுது போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை