உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகார மையம் எவரும் இல்லை; நேற்று மோகன் லால், இன்று மம்முட்டி; கமிட்டி அறிக்கையால் கதறுது மல்லுவுட்

அதிகார மையம் எவரும் இல்லை; நேற்று மோகன் லால், இன்று மம்முட்டி; கமிட்டி அறிக்கையால் கதறுது மல்லுவுட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரள திரையுலகத்தில் அதிகார மையம் என்று யாரும் இல்லை, பாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்களை இயற்றுவதில் சிக்கல் இருந்தால் தீர்க்கப்பட வேண்டும் என்று பிரபல நடிகர் மம்முட்டி கருத்து தெரிவித்துள்ளார்.கேரள திரையுலகத்தையே கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டியின் அறிக்கை உலுக்கி எடுத்து வருகிறது. திரையுலகில் காலம், காலமாக பாலியல் கொடுமை நடந்து வருவதாக அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பதே ஒட்டுமொத்த அதிர்ச்சிக்கு காரணம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yjr5c9vl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ராஜினாமா

இதன் காரணமாக, மலையாள திரைப்பட சங்கத்தில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளில் இருந்து ராஜிநாமா செய்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் மவுனம் காத்த மோகன்லால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறி இருந்தார். குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகர்கள் பற்றியும், கேரள சினிமாவின் கருப்பு ரகசியங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்றும் பல விதமாக பேச்சுகள் சமூக வலைதளங்களில் கிளம்பின.

மம்முட்டி கருத்து

மோகன்லாலின் கருத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று திரையுலகில் பேசப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு பிரபல நடிகரான மம்முட்டியும் இந்த விவகாரத்தில் கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஹேமா கமிட்டி பரிந்துரைகள், தீர்வுக்கான ஆலோசனைகள் அனைத்தையும் நான் வரவேற்கிறேன். கமிட்டியில் குறிப்பிட்டுள்ளவற்றை கேரள திரையுலகத்தின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். பாலியல் கொடுமை பற்றி எழுப்பப்பட்ட புகார்கள் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த விசாரணை நேர்மையாக நடக்கட்டும். கோர்ட்டின் முன் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கு என்ன தண்டனை என்பதை கோர்ட்டே அறிவிக்கட்டும்.

அதிகார மையம் இல்லை

திரையுலகில் அதிகார மையம் என்று எதுவும் கிடையாது. சினிமா என்பது இத்தகைய விஷயங்கள் இருக்கக்கூடிய களம் அல்ல. பரிந்துரைகளை செயல்படுத்துவதில் சட்ட சிக்கல்கள் இருந்தால் அவை களையப்பட வேண்டும். ஒட்டு மொத்தத்தில் சினிமா வாழவேண்டும். ஒரு பிரச்னை என்று வரும்போது சம்பந்தப்பட்ட அமைப்பு தான் முதலில் கருத்து கூறவேண்டும். அதன் பின்னரே உறுப்பினரான என்னை போன்றோர் கருத்துகள் தெரிவிக்கவேண்டும். அதனால் தான் இதுவரை காத்திருந்தேன் என்று கூறி உள்ளார்.

ரஜினிக்கு தெரியாது

இதற்கிடையே, படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினியிடம், மலையாள திரையுலகை கலக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'எனக்குத்தெரியாதுங்க அதைப்பற்றி எதுவும் தெரியாதுங்க ஸாரி' என்றார்.கார் பந்தயம் பற்றிய கேள்விக்கு, 'வாழ்த்துக்கள்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mr Krish Tamilnadu
செப் 01, 2024 18:33

பெண்களின் சுதந்திர சிந்தனையில் அவர்கள் ஏறி செல்லும் இன்னொரு படிக்கட்டு இந்நிகழ்வு. இன்று படிக்கட்டு உங்கள் மீது. அடித்து நொறுக்கி உடைத்து வீழ்ந்தும் போது வீழ்ந்து தான் ஆக வேண்டும். அவர்களுக்கு தொழில் ரீதியாக தடையும், அசிங்கம், அவமானத்தை அள்ளி தந்தவர்கள், கூனி குறுகி நின்று தான் ஆக வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையே தெளிவான தீர்ப்பு தான். முழுவதும் உண்மை பொய்களை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நேர்மையான தீர்ப்பு தான். சமூகத்தின் குறைபாடுகளை சுட்டி காட்டும் திரையுலகம், தனது குறைக்கு தீர்ப்பை கூற ஏன் மறுக்கிறது. சாதாரணமாக எந்த இடத்தில் ஒரு தவறு நடந்தாலும், அந்த இடத்தில் இருந்து அந்த நபர் தூக்கியெறிய படுவார். அதே தான் தவறுழைத்தவர்கள் திரையுலகத்தில் இருந்து தூக்கியெறிய பட வேண்டும். பத்து பேருக்கு தரும் தண்டனை, உலக சினிமாவிற்கே இந்த பிரச்சினைக்கு தீர்வு தந்து விடும். சட்ட ரீதியான நடவடிக்கையை சட்டம் பார்த்து கொள்ளும். திரையுலகம் அவர்களை தூக்கியெறிய வேண்டும்.


J.Isaac
செப் 01, 2024 18:30

ஸ்டுடியோவில் காதல் காட்சியில் நடிக்கும் போது நடிகரும் நடிகையும் இணைந்து தானே செயல்படுவார்கள். ஆணும் பெண்ணும் இணையும் போது இடம். பொருள், ஏவல் தெரியுமா ?


GMM
செப் 01, 2024 18:00

ஹேமா கமிட்டி பக்குவமாக விசாரித்து, நடிகர்கள், தயாரிப்பாளர்கள்மீது புகார் பெற்றுள்ளது. இவர்களுக்கு பின் ஆள், அதிகார பலன் இருக்காது. மாற்றான் தோட்ட மல்லிகை மணம் விரும்பும் சர்வ அரசியல்வாதிகள் ஒருவர் கூட இல்லை ஏன்? அரசியல் ரகசியம் வெளிவந்தால், புகார் கூறும் நடிகைகள் குடியிருக்க முடியாதா? ஆடு கசாப்பு கடையில் கத்திரி கிடைக்காது. துஷ்டர் என உணர்ந்தால் தூர செல்க.


புதிய வீடியோ