உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மது கோப்பை, சிகரெட்டுடன் தோன்றி கோர்ட் விசாரணையை சீர்குலைத்தவர் கைது

மது கோப்பை, சிகரெட்டுடன் தோன்றி கோர்ட் விசாரணையை சீர்குலைத்தவர் கைது

புதுடில்லி:நீதிமன்றத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணை நடந்து கொண்டிருந்த போது, அரைகுறை ஆடையுடன் மது அருந்திக் கொண்டு, சிகரெட் புகைத்தபடி தோன்றியவர் கைது செய்யப்பட்டார். புதுடில்லி தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் செப். 17ம் தேதி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது, அகிப் அக்லக் என்ற விசாரணைக் கைதிக்கு பதிலாக திரையில் தோன்றியவர் அரைக்கால் டவுசர் மட்டும் அணிந்திருந்தார். மேலும், மது அருந்திக் கொண்டு, சிகரெட் புகைத்தபடி நீதிமன்ற விசாரணையில் குறுக்கிட்டார். இணைப்பை துண்டிக்குமாறு நீதிமன்ற ஊழியர்கள் அறிவுறுத்தியும் அவர் கேட்கவில்லை. நீதிமன்ற பதிவேடு காப்பாளர் அன்ஷுல் சிங்கால் கொடுத்த புகார்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அவர் பயன்படுத்திய இணையதள முகவரியை வைத்து, நீதிமன்ற விசாரணையை சீர்குலைத்தவர் கோகுல்புரியைச் சேர்ந்த முஹமது இம்ரான்,32, என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பழைய முஸ்தபாபாத் சாமன் பூங்கா அருகே உள்ள வீட்டில் இருந்த இம்ரான் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 50க்கும் மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், 'வெப் - எக்ஸ் வீடியோ கான்பரன்சிங்' தளம் குறித்து நண்பர் வாயிலாக அறிந்து கொண்டு, ஆர்வக் கோளாறில் நீதிமன்ற விசாரணை யில் பங்கேற்றதை இம்ரா ன் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து மொபைல் போன், சிம் கார்டு மற்றும் ஒரு ரூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய இம்ரான், ஏ.சி., மெக்கானிக்காக பணியாற்றியுள்ளார். போதைக்கு அடிமையானதால் வழிப்பறி, கொள்ளை என குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு 2021ல் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமினில் வந்த பின், மீண்டும் துவக்கி விட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை