வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே சோழசிராமணி பகுதியைச் சோ்ந்தவா் அமுதா. இவரது 13 வயது மகள் கடந்த அக்டோபா் மாதம் வீட்டில் இருந்து காணாமல் போனாா். அவரை கண்டுபிடித்து தரும்படி ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் அமுதா புகாா் அளித்தாா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பினாா். மேலும் அவருக்கு சமூக வலைதளம் மூலம் திருவண்ணா மலையைச் சோ்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் , அவா் ஆசைவாா்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் சிறுமி ஜேடா்பாளையம் காவல் நிலைய போலீஸாரிடம் தெரிவித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை ஆசைவாா்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு இருவா் உட்படுத்தியதாகவும், இருவா் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்கள் குறித்து முழுமையான விவரங்களை அளிக்க போலீஸாா் மறுத்து விட்டனா். ஒரு மார்க்கம் ன்னா பேரு போடமாட்டோம்ல ?? கொடுக்க மாட்டோம்ல ??
போதைமருந்து கடுந்துயவர்கள் எவராரியினும்ம் மரண தண்டனை தான் சரியான தீர்வு அதுவும் உடனடியாக நிறைவேற்றப்படலாம்
சந்தேகமில்லாமல் அயலக அணியாகத்தான் வாய்ப்பு இருக்கிறது
அயலக அணியின் சிறுபான்மை பிரிவா இருந்தா பேரே போடமாட்டோம்ல ????
அவர் தமிழ்கத்தை சேர்ந்த ஒருவருக்காக இருக்குமோ என்று விசாரிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ரூ.1.40 கோடி தங்கம் கடத்தி வந்த ஊழியர் கைது
17-Dec-2024