உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விலகி சென்ற காதலியை 17 முறை குத்தி கொன்ற கள்ளக்காதலன் கைது

விலகி சென்ற காதலியை 17 முறை குத்தி கொன்ற கள்ளக்காதலன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சுப்பிரமண்யபுரா: கர்நாடகாவின் பெங்களூரு சுப்பிரமண்யபுரா பூர்ணபிரக்யா லே - அவுட்டில் உள்ள, 'ஓயோ' ஹோட்டலில், இம்மாதம் 7ம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அந்த ஹோட்டல் ஊழியர்கள், போலீசாருக்கு நள்ளிரவில் தகவல் தெரிவித்தனர்.போலீசார் விரைந்து வந்து, ஹோட்டலில் பதிவான கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட ஹரிணியுடன் வந்த நபரின் அடையாளம் தெரிந்தது. அவரின் படத்தை, அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த அந்நபரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

விசாரணையில் வெளியான தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:

குற்றவாளியின் பெயர் யசஸ், 25. கெங்கேரியை சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஹரிணியும், திருவிழா ஒன்றில் சந்தித்துக் கொண்டனர்.இருவரும் தங்கள் மொபைல் போன் எண்களை பறிமாறிக் கொண்டனர். ஹரிணிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவ்விஷயம் யசசுக்கு தெரியும். அன்று முதல் இருவரும் மொபைல் போனில் பேசியும், நேரில் சந்தித்தும் வந்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, இவ்விஷயம் ஹரிணியின் கணவர் தாசே கவுடாவுக்கு தெரிய வந்தது. கோபமடைந்த அவர், மனைவிக்கு அறிவுரை கூறி, மொபைல் போனை பறித்து, அவரை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தார். தன்னுடன் ஹரிணி பேசாமல் இருந்ததால், யசஸ் கோபத்தில் இருந்தார்.இம்மாதம் 7ம் தேதி, பூர்ணபிரக்ஞா லே - அவுட்டில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓயோ ஹோட்டலில் அறை எடுத்து ஒன்றாக இருந்தனர். அப்போது, இந்த உறவை நிறுத்திக் கொள்வது குறித்து ஹரிணி பேசியதாக தெரிகிறது.கோபமடைந்த யசஸ், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கத்தியால், ஹரிணியை 17 முறை குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியதை ஒப்புக்கொண்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Padmasridharan
ஜூன் 11, 2025 08:04

இதுல குற்றவாளி யார்.. கல்யாணம் ஆகியும் அதை மறைத்து ஒருத்தனோட பேசிய பெண்ணா.. அவரை அடைத்துவைத்த கணவனா. . படிப்பறிவு இருந்தும் அந்த பெண்ணை கொன்றவனா. சட்டம் ஒருவருடைய உயிர் எடுத்தவரைதான் குற்றவாளி ஆக்கும். மற்றவரை அடிப்பதும், மிரட்டுவதும், கொலை செய்வதும் தீங்கே. இதை ஏன் இந்திய பொருளாதாரத்தை வளர்த்த மக்கள் தங்கள் குடும்ப நன்மைக்காக தெரிந்து கொள்வதில்லை. பாடப்புத்தகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், திரைப்படங்கள் எல்லாமே ஒருவருடைய நல்வளர்ச்சிக்கு பயன்படுகின்றது. ஆனால் ஓவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக சமூகத்தில் பார்க்கும் மக்கள் வெறும் பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று focus செய்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களின் வாழ்க்கைதான் வாழ்க்கை என்று முக்கியத்துவம் கொடுத்து எண்ணுகிறார்கள். எதை எடுத்தாலும், எங்கு பார்த்தாலும் சினிமா நடிகர்கள்தான். இதில் மது கடைகளும் அடங்கும். One life so enjoy என்பதை விட safety life என்பதை நிறைய பேர் நினைக்க மறக்கிறார்கள். அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் மாதா_பிதா_குரு_தெய்வம் எல்லாருமே பணத்திற்காக உழைத்து_உழைத்து இந்திய பொருளாதாரத்தை வளர்த்து_வளர்த்து குடும்பத்தில் நிம்மதியை தொலைத்து, அழிந்து கொண்டிருக்கிறார்கள். மாற்றம் தேவை


Anbarasu K
ஜூன் 10, 2025 15:34

கொடுமையே பாவம் எங்கயாவது நல்ல இருக்கட்டும் இன்னு கொள்ளாம விட்டிருக்கலாம் இப்பிறவியே இப்பிறவியே வீணாகிவிட்டது


Natchimuthu Chithiraisamy
ஜூன் 10, 2025 14:11

சரியான தண்டனை பெண்களுக்கு நல்ல செய்தி


raja
ஜூன் 10, 2025 09:25

காதலில் என்ன கள்ள காதல் நல்ல காதல்.. திருமணம் பந்தம் கடந்த உண்ணாமை காதல் என்ற அண்ணன் சுநா பானா வீனாவிர்க்கே இது சமர்ப்பணம்....


Natchimuthu Chithiraisamy
ஜூன் 10, 2025 14:09

திருமணம் ஆனவள் என்பதினால்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 10, 2025 07:54

கலாச்சார சீரழிவு. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கவனித்து வளர்க்க வேண்டும். இந்த வயதில் இதெல்லாம் தேவையா.


Mani . V
ஜூன் 10, 2025 04:53

திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள். அப்படியும் கள்ளக் காதல் தேவைப்பட்டு போன் நம்பரை பரிமாறிக் கொண்டார்கள். சப்பாஸ். இப்படித்தான் முற்போக்கு சிந்தனையுடன் இருக்க வேண்டும்.


Ganapathy
ஜூன் 10, 2025 04:10

2018 உச்சநீதிமன்ற உத்திரவுபடி திருமணத்திற்க்கு அப்பாற்பட்ட உடலுறவு குற்றமாகாது ஆனால் கொலை செய்தது மட்டும்தான் குற்றம்.


Rathna
ஜூன் 10, 2025 11:09

கனவான்களே விபச்சாரத்தை தூண்டினால்?


சமீபத்திய செய்தி