உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவிக்காக பைக் திருடியவர் பிடிபட்டார்

மனைவிக்காக பைக் திருடியவர் பிடிபட்டார்

புதுடில்லி:உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் அமன் காலனியைச் சேர்ந்தவர் கமர் ஆலம். லோனி தொழிற்சாலை ஊழியர். சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆனது. அவரது இளம் மனைவி, பைக்கில் அழைத்துச் செல்லுமாறு நச்சரித்தார்.கடந்த 15ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல காஷ்மீரி கேட் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் போது, சிவில் லைன்ஸ் மெட்ரோ ரயில் நிலைய 3ம் எண் கேட் அருகே, ஏராளமான பைக்குகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததைப் பார்த்தார். தன்னிடம் இருந்த போலி சாவியை பயன்படுத்தி அதில் இருந்து ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.பைக் உரிமையாளர் கொடுத்த புகார்படி, திருட்டு வழக்கு பதிவு செய்த போலீசார், 200க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.காஜியாபாத் வீட்டில் இருந்த கமர் ஆலம் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து பைக் மீட்கப்பட்டது.மனைவி பைக் சவாரி செய்ய ஆசைப்பட்டதால் திருடியதாகவும், போலீஸ் கண்டுபிடிக்காமல் இருக்க அதை விற்று விட முயன்றதாகவும் ஆலம் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை