மேலும் செய்திகள்
ராகுலுக்கு கொலை மிரட்டல் போலீசில் காங்., புகார்
28-Sep-2024
சண்டிகர்: ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. ஓட்டு எண்ணிக்கை நடந்த அன்று, வாட்ஸ் ஆப் குரூப்பில் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்த மிரட்டல் விடுத்தது ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்த அஜ்மீர் என தெரியவந்ததது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
28-Sep-2024