உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு உளவு: ஹரியானாவில் ஒருவர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு: ஹரியானாவில் ஒருவர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக ஹரியானாவின் பானிபட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.பாகிஸ்தானில் உள்ள உளவு அமைப்புகள் மற்றும் சில நபர்களுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு, ஹரியானா மாநிலம், பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.24 வயதான நௌமன் இலாஹி உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.அவரிடம் உள்ள மொபைல்போனில் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், முக்கிய தகவல்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நௌமன் இலாஹி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டத்தை தொடர்ந்து ஹரியானா மாநில போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் நேரத்தில் இல்லாஹியின் கைது நடந்துள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

என்றும் இந்தியன்
மே 15, 2025 17:27

யாரை கைது செய்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையும் தீவிர விசாரணை வளையத்திற்க்குள் கொண்டுவந்தால் பல உண்மைகள் வெளியே வரும்.


Bahurudeen Ali Ahamed
மே 15, 2025 15:41

தேச துரோக குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக மரணதண்டனை கொடுக்கவேண்டும் தயவுசெய்து மதத்தை இங்கு கொண்டுவராதீர்கள், தேச துரோகிகள் அனைத்து மதத்திலும் இருக்கிறார்கள்


shakti
மே 15, 2025 15:17

அமைதி ரகத்தில் பயணித்தாலே இதுதான் போல


R S BALA
மே 15, 2025 13:19

இவர்கள் என்றுமே இந்தியவிற்கு ஆபத்தானவர்கள்தான்..


Kumar Kumzi
மே 15, 2025 12:05

விஷ பாம்புகள் இங்கு தலையை வைத்துக்கொண்டு பாக்கிஸ்தானுக்கு வாலையட்டும் மிக கொடூர பாம்புகள் விசாரித்துவிட்டு சுட்டுக்கொல்லுங்கள்


Rathna
மே 15, 2025 10:46

விஷ விதைகள் நாடு முழுவதும் பரவி வருகிறது.


RK
மே 15, 2025 10:37

இந்த தேசவிரோத கும்பல்களின் வீடுகளை தரைமட்டம் செய்து பாக்கிஸ்தான் பார்டரில் மரத்தில் கட்டி வைக்க வேண்டும் மீதியை தீவிரவாதிகள் பார்த்து கொள்வார்கள்.


Karthik
மே 15, 2025 09:44

இந்தியா முழுக்க இந்த விஷ பாம்புகளை பால் ஊற்றி வளர்க்கிறோமோ என்று என்ன தோன்றுகிறது.


நிமலன்
மே 15, 2025 09:43

இந்த தேசத்தை இந்து தேசம் என்று அறிவிக்க நேரம் வந்து விட்டதாகவே கருத வேண்டும். நம் தேசத்திற்கு வந்து இந்து என்று உறுதி செய்த பிறகு சுட்டு சாகடிக்கிறான் என்றால், எதற்காக நம் நாடு மதசார்பற்ற நாடாக தொடர வேண்டும்.


sundar
மே 15, 2025 11:56

அட போங்கப்பா.


Ramesh Sundram
மே 15, 2025 09:38

அமைதி மார்கத்தை சேர்ந்தவர் என்றைக்கும் நமது நாட்டிற்கு விசுவாசமாக இருக்க மாட்டார் அவர்களுக்கு மதம் மட்டுமே பெரியது வேறு ஒன்று இல்லை அவர்கள் இருக்கும் இடம் எல்லாம் பிரச்சினை தான் வேறு எதுவும் இல்லை


மூர்க்கன்
மே 17, 2025 14:52

பார்த்தாலே தெரிகிறது?? ரமேஷ் சுந்தரம் மதத்தை மற மனிதம் கண்ணுக்கு தெரியும்.


சமீபத்திய செய்தி