வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஓவரான திமிரில் காரை ஓட்டி மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது - சிறையில் சில வருடம் செலவிட வேண்டிய அளவுக்கு கொண்டுபோய் விட்டுள்ளது. இது போல திமிரெடுத்து அலைபவர்கள் இதைப்பார்த்தாவது திருந்த வேண்டும்.
பெங்களூரு: சிகரெட் வாங்கித் தராததால், பைக் மீது காரை ஏற்றி வாலிபரை கொலை செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.கர்நாடகாவின், பெங்களூரு கனகபுரா ரோடு, வசந்தபுரா கிராஸ் பகுதியில், கடந்த 10ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு இரு வாலிபர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அவர்கள் அருகே, பலத்த சேதம் அடைந்த நிலையில் ஒரு பைக்கும் கிடந்தது. சிகிச்சை
இரு வாலிபர்களையும் சுப்பிரமணியபுரா போலீசார் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய், 27, என்பவர், 12ம் தேதி இறந்தார். அவரது நண்பர் கார்த்திக், 26, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அதில், வேகமாக வந்த கார் ஒன்று, பைக் மீது மோதியது தெரிந்தது. காரின் பதிவெண்ணை வைத்து விசாரித்தபோது, அதன் உரிமையாளர் வசந்தபுரா கிராசில் வசிக்கும் பிரதீக், 30, என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகின. சாப்ட்வேர் இன்ஜினியர்களான சஞ்சய், கார்த்திக் ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தனர். 10ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு, வேலை முடிந்ததும் வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டனர்.வசந்தபுரா கிராஸ் பகுதியில் உள்ள, டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்தனர். அந்த வழியாக காரில் மனைவியுடன் வந்த பிரதீக், காருக்குள் இருந்தபடியே சிகரெட் வாங்கித் தரும்படி சஞ்சயிடம் கூறினார். தகராறு
இதனால் கோபம் அடைந்த சஞ்சய் மற்றும் கார்த்திக், பிரதீக்கிடம் தகராறு செய்தனர்.பிரதீக்கை, டீக்கடைக்காரர் சமாதானம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். டீ குடித்துவிட்டு சஞ்சய், கார்த்திக் பைக்கில் சென்றபோது, வேண்டுமென்றே பைக் மீது, பிரதீக் காரால் மோதியது தெரிய வந்தது.இந்த சம்பவம் நடந்தபோது காருக்குள், பிரதீக் மனைவியும் இருந்தது தெரிய வந்தது. அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடப்பதாக, தெற்கு மண்டல டி.சி.பி., லோகேஷ் கூறினார்.
ஓவரான திமிரில் காரை ஓட்டி மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது - சிறையில் சில வருடம் செலவிட வேண்டிய அளவுக்கு கொண்டுபோய் விட்டுள்ளது. இது போல திமிரெடுத்து அலைபவர்கள் இதைப்பார்த்தாவது திருந்த வேண்டும்.