உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனுக்களே மாலை; ஜோக்கர் பட ஸ்டைல்! கலெக்டர் ஆபீசில் உருண்டு புரண்ட மனுதாரர்!

மனுக்களே மாலை; ஜோக்கர் பட ஸ்டைல்! கலெக்டர் ஆபீசில் உருண்டு புரண்ட மனுதாரர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்; போபால் அருகே புகார் மனுக்களை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒருவர் உருண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் பிரஜாபதி என்பவர் தமது ஊரின் பஞ்சாயத்து தலைவர் கன்கர்யா என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி புகார் மனுக்களை அளித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து புகார் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியபடியே இருந்திருக்கிறார்.

தினுசான ஐடியா

அவரின் புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. என்ன செய்தால் நடவடிக்கை பாயும் என்று யோசித்தவருக்கு தினுசாக ஒரு ஐடியா தோன்றி இருக்கிறது. இதுவரை தான் அளித்த மனுக்களின் நகல்களை ஒரு மாலை போல தொடுத்து இருக்கிறார்.

மனுக்களுடன் உருட்டு

பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாளில் அங்கு சென்று உள்ளார். அங்கு அவர் செய்த காரியம் தான் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. கலெக்டர் அலுவலக வளாக வாசலில் மேல் சட்டையை கழற்றியபடி வந்த அவர், முழங்கையை மடக்கி தவழ்ந்து வந்தார். அவரது கழுத்து முழுவதும் இதுவரை தான் அனுப்பிய அத்தனை மனுக்களையும் ஒரு மாலையாக கட்டி அணிந்தபடி உருண்டபடியே நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

உத்தரவு

இதைக்கண்ட அதிகாரிகள் திகைத்து நிற்க ஒரு சிலர் அலுவலகத்தின் உள்ளே இருந்து வெளியே வந்து என்ன இது என்று புரியாமல் குழம்பி போயினர். இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட, மனுக்கள் மீது உடனடியாக மறு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அவர் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சமூக நல விரும்பி
செப் 04, 2024 13:58

சூப்பர். ஐடியா. இப்படி வித்தியாசமாக ஏதாவது செய்தால் தான் நாடு உற்படும்.


MADHAVAN
செப் 04, 2024 13:08

இதுவே தமிழநாடுல நடந்திருந்துச்சுனா, இது என்ன அரசாங்கம் அப்பிடின்னு சொல்லுவானுங்க, இது பிஜேபி ஆளும் மாநிலம் என்பதால் மனுதாரரை பைத்தியம் கிறுக்கன் னு சொல்றானுங்க


Ramesh Sargam
செப் 04, 2024 13:03

என்னதான் உருண்டுபுரண்டாலும் ஒரு பருப்பும் வேகாது. லஞ்சம் கொடுக்காமல் நம் நாட்டில் எதையும் சாதிக்கமுடியாது.


புண்ணியகோடி
செப் 04, 2024 10:33

ஊருக்கு ரெண்டு கிறுக்கன்ஸ் இப்படி இருப்பாங்கோ


SANKAR
செப் 04, 2024 11:28

Inga collector thaan somberi


சமீபத்திய செய்தி