உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 ஆண்டாக தேடப்பட்டவர் பிடிபட்டார்

5 ஆண்டாக தேடப்பட்டவர் பிடிபட்டார்

புதுடில்லி:கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில், ஐந்து ஆண்டுகளாக தேடப்பட்டவர் நேற்று கைது செய்யப்பட்டார். டில்லி பல்கலை முன்னாள் மாணவர் ரஜத் தோமர், 45. கடந்த, 2007ம் ஆண்டில் விகாஸ்புரி போலீசில் அவர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, குருகிராமில் 2016ல் நடந்த கொள்ளை, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் பல குற்ற வழக்குளில் வழக்குகளில் ரஜத் தேடப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல நகரங்களுக்கு இடம் பெயர்ந்த ரஜத், புதுடில்லி பஞ்சாபி பாகில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார், ரஜத் தோமரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை