உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலை பார்த்த நிறுவனத்தின் பணத்துடன் மாயமானவர் ஒரு வாரத்திற்கு பின் சிக்கினார்

வேலை பார்த்த நிறுவனத்தின் பணத்துடன் மாயமானவர் ஒரு வாரத்திற்கு பின் சிக்கினார்

புதுடில்லி:டில்லியில், வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து, 18 லட்ச ரூபாயுடன் ஓட்டம் பிடித்த ஊழியர், ஒரு வாரத்திற்கு பின் போலீசில் சிக்கினார். உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகரை சேர்ந்தவர் சந்தீப்குமார் சிங். மேற்கு டில்லி பகுதியில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றில், கடந்த, 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவரை நம்பிய அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அஜய் சதிஜா என்பவர், கடந்த 3ம் தேதி, சந்தீப்குமார் சிங்கை அணுகி, '18 லட்ச ரூபாயை, அசோக் விஹார் பகுதியில் உள்ள என் சகோதரன் வீட்டில் கொடுத்து விடுங்கள்' என கூறி, நிறுவனத்திலிருந்து, 18 லட்ச ரூபாயை அவரிடம் கொடுத்து அனுப்பினார். அந்த பணத்துடன் சென்ற சிங்கை, அதன் பின் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவரின் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. டில்லி போலீசார், நேற்று முன்தினம் அவரின், உ.பி., வீட்டில் சோதனையிட்டனர். எனினும், பணம், அதை கடத்திய நபரும் சிக்கவில்லை. இந்நிலையில், டில்லி மெட்ரோ ரயில் பாதையில் பதுங்கியிருந்த அவரை, போலீசார் நேற்று காலையில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன் நிறுவனத்தின் முதலாளி கொடுத்தனுப்பிய பணத்தை, வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக கூறி, எடுத்து கொடுத்தார். அதில், 35 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்தது. அதையடுத்து, அவரிடம் அந்த பணம் எங்கே என்றும், அவரின் முறையற்ற செயலுக்கு வேறு யாரேனும் துணை போயினரா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை