உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணாலியில் ஜிப்லைனில் சென்றபோது விபத்து: 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண்

மணாலியில் ஜிப்லைனில் சென்றபோது விபத்து: 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண்

மணாலி; மணாலியில் ஜிப் லைனில் செல்லும் போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து பெண் ஒருவர் கீழே விழுந்த வீடியோ வைரலாகி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு;ஹிமாச்சலப்பிரதேசம் மணாலி புகழ்பெற்ற சுற்றுலா தளம். இங்கு தற்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து சுற்றி பார்த்து வருகின்றனர். நாக்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபுல்லா பிஜ்வே என்பவரும் தமது குடும்பத்தினருடன் அங்கு வந்திருந்தார். அங்குள்ள ஜிப்லைனில் பிரபுல்லா பிஜ்வே மகள் த்ரிஷா பிஜ்வே என்பவர் சென்று கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பாதி தூரம் அவர் கடந்த போது திடீரென ஜிப்லைன் கயிறு அறுந்தது. 30 அடி உயரத்தில் இருந்து அப்பெண் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த த்ரிஷா, உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ponssasi
ஜூன் 17, 2025 16:44

சென்னையில் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் உள்ள சாகச விளையாட்டுகளில் சரியான பராபரிப்பு இல்லை, பாதுகாப்பு இல்லை. விபத்து நடந்தாலும் அது செய்தியாக வருவதில்லை


பெரிய ராசு
ஜூன் 16, 2025 12:25

வீட்டில் சும்மா இருக்க முடியாரது இல்லையே , நண்டு கொழுத்த வளையில் இருக்காது ...இங்கே அன்றாட வாழவே ஒரே அக்க போர் ..


Elango S
ஜூன் 15, 2025 20:02

யார் போக சொன்னது போய் விழ சொன்னது சாகசம் என நினைத்து விளம்பர படுத்த ஆசை படும் போது சாகவும் தயாராக இருக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை