உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்களூருவில் ஒரு மழைக்கே தாங்காத மேம்பாலம்; திறப்பு விழா கண்ட 15 நாட்களில் கசிவு

மங்களூருவில் ஒரு மழைக்கே தாங்காத மேம்பாலம்; திறப்பு விழா கண்ட 15 நாட்களில் கசிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மங்களூரு: மங்களூருவில் திறக்கப்பட்டு 15 நாட்களே ஆன மேம்பாலம், பலத்த மழையால் சேதம் அடைந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. பெங்களூரு, மைசூரு, மங்களூரு என மாநிலத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. தட்சிண கன்னடா, ஷிவமோகா, குடகு, சிக்கமகளூரு பகுதிகளையும் மழை விட்டு வைக்கவில்லை.தொடர் மழை காரணமாக பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்தது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடியதால் போக்குவரத்தும் முடங்கியது.இந் நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மங்களூருவில் உள்ள மேம்பாலம் மழையால் பழுதாகி உள்ளது, பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காகவும், போக்குவரத்துக்காகவும் திறக்கப்பட்டு 15 நாட்கள் மட்டுமே ஆகிறது. பாலத்தின் மேல் பகுதியில் இருந்து மழைநீர் கசிந்து, பல அடி உயரத்தில் இருந்து பொத்துக் கொண்டு நீர் வீழ்ச்சியாக கொட்டுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் மழைநீர் அருவியாக மாறி, பாலத்தின் அடியில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார் ஒன்றின் மீது விழுகிறது. வீடியோ வைரலான நிலையில், மேம்பாலத்தின் கட்டுமான உறுதித் தன்மை மீது கேள்வி எழுந்துள்ளது. பாலத்தின் தரம் மோசமாக இருப்பதை இந்த பாலம் கண் முன்னே நிறுத்துவதாகவும், கட்டுமான ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் அதன் உறுதித்தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

shyamnats
ஜூன் 17, 2025 13:26

தூத்துக்குடியிலும் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் 9 வது முறையாக ஓட்டை விழுந்தது. காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, வேலை தரமாக இல்லையென்றால் அவர்களை நஷ்டத்திற்கு பொறுப்பாக்க வேண்டும். ஆனால் அவர்கள், பதவியில் உள்ளவர்களுக்கு நிறைய லஞ்ச பணம் கொடுக்க வேண்டியிருந்தது என்று சொல்வார்கள்.


Ramesh Sargam
ஜூன் 17, 2025 13:12

கர்நாடக காங்கிரஸ் அரசும், தமிழக திமுக அரசும் ஊழல் போட்டிபோட்டுக்கொண்டு செய்து இப்படி தரமில்லாத கட்டுமானங்களை கட்டுகிறார்கள். மக்கள்தான் அவர்களுக்கு வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டவேண்டும்.


Iyer Sethuraman
ஜூன் 17, 2025 12:13

Vote for congress


சமீபத்திய செய்தி