உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாம்பழ கண்காட்சி இன்று நிறைவு

மாம்பழ கண்காட்சி இன்று நிறைவு

புதுடில்லி:அடர் சிவப்பு, சுஹாக் சிந்துாரி, மஜ்னு, கரினா உட்பட, 400க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள், 34வது மாம்பழக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.டில்லி அரசின் சுற்றுலாத் துறை சார்பில், டில்லி தியாகராஜ் மைதானத்தில் மாம்பழக் கண்காட்சியை முதல்வர் ரேகா குப்தா நேற்று முன் தினம் துவக்கி வைத்தார். இன்று நிறைவு பெறுகிறது. கண்காட்சிக்கு எளிதாக வந்து செல்ல ஐ.என்.ஏ., மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தியாகராஜ் மைதானம் வரை இலவச போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.அம்ரபாலி, லாங்டா, டாஷேரி, டோட்டா பாரி, கரேலா, டோமி அட்கின், மோடி, கோகிலா, ஹாத்தி, மாலிகா டாஷேரி, அடர் சிவப்பு, சுஹாக் சிந்துாரி, மஜ்னு, கரினா உட்பட 400க்கும் மேற்பட்ட மாம்பழங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சில வகைகளில் ஒரு மாம்பழமே 2 கிலோ எடை இருந்தது. மாம்பழம் மட்டுமின்றி மாங்காய் ஊறுகாய், பழச்சாறு, மாங்காய் சட்னி, பப்பட் மற்றும் மாங்கன்றுகள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேசம், பீஹார், மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் உற்பத்தியை இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.அமைச்சர் கபில் மிஸ்ரா, எம்.எல்.ஏ., நீரஜ் பசோயா, தலைமைச் செயலர் தர்மேந்திரா, சுற்றுலாத் துறை நிர்வாக இயக்குநர் நிஹரிகா ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை