உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூர் முதல்வரை மாற்றுங்க; பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் தேசிய மக்கள் கட்சி!

மணிப்பூர் முதல்வரை மாற்றுங்க; பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் தேசிய மக்கள் கட்சி!

இம்பால்: மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் மாற்றப்பட்டால், மீண்டும் பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் என தேசிய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. ஆதரவை வாபஸ் பெற்ற, ஒரு நாள் கழித்து தேசிய மக்கள் கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என, மெய்டி சமூகத்தினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இதனால், மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்ந்து வன்முறை, கலவரமாக மாறியது. இதில், 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது, இரண்டு சமூகத்தினர் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள கலவரங்களால் மணிப்பூர் மாநிலம் எரிகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளுக்கு தீ வைத்த ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள், முதல்வரின் வீடு, அரசு சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூருக்கு கூடுதல் ராணுவ படையினரை, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது.இதற்கிடையே, ஆளும் பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மக்கள் கட்சி, அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இந்த கட்சி தலைவர் கன்ராட் சங்மா, 'வன்முறையை கட்டுப்படுத்துவதில், பைரேன் சிங் தலைமையிலான அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது' என குற்றம் சாட்டினார். ஆதரவை வாபஸ் பெற்ற, ஒரு நாள் கழித்து தேசிய மக்கள் கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது.இது குறித்து கன்ராட் சங்மா கூறியதாவது: மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் மாற்றப்பட்டால், மீண்டும் பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம். அமைதியை மீட்டெடுக்க, நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றார். மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் நிர்வாகம் தோல்வி அடைந்தது. முதல்வரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தஞ்சை மன்னர்
நவ 19, 2024 12:16

நீங்க என்ன முதல்வரை மாற்றுவது நாங்கள் சொல்லுவது மாநில அரசை கலைத்து விட்டு ஆட்சி மாற்றத்திற்கு ஏற்பாடுசெய்யுங்கள் என்பதுதான் எதுவும் நடக்காத காஷ்மீர் மாநில சட்டசபை முடக்கி வைத்து விட்டு 1500 பேருக்கு மேலாக நடந்து இருக்கும் உயிர் பழிக்கு பொறுப்பேற்று நாசமா போன பி சே பி ஆட்சியை ஆட்சி கட்டில் இருந்து நீக்கு என்பதுதான் கோரிக்கை


முக்கிய வீடியோ