ஜெய் ஸ்ரீராம் என கூறியவர்கள் மீது கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வன்முறை ஏவிவிடப்பட்டது. ராகுலுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்களை போல் பலர் வந்திருக்கின்றனர்; சென்றிருக்கின்றனர். ஹிந்துஸ்தான் மட்டுமே கடைசி வரை இருக்கும். - ஸ்மிருதி இரானி, மத்திய அமைச்சர், பா.ஜ.,முற்றுப்புள்ளி அவசியம்!
மேற்கு வங்கத்தில் மத்திய விசாரணை அமைப்புகள் மீதும், பா.ஜ.,வினர் மீதும், ஆளும் திரிணமுல் காங்., கட்சியினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். என் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பிரச்னைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். - லாக்கெட் சட்டர்ஜி, மூத்த தலைவர், பா.ஜ.,பாகிஸ்தானுக்கான தேர்தல் அறிக்கை!
காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலை கண்டிக்கிறோம். அக்கட்சியின் தேர்தல் அறிக்கை, நம் நாட்டுக்காக தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு ஏற்ற வகையில், காங்., தேர்தல் அறிக்கை உள்ளது.- ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,