உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய தேர்தல் பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் தவறான கருத்து: சிக்கலில் மெட்டா!

இந்திய தேர்தல் பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் தவறான கருத்து: சிக்கலில் மெட்டா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தல் பற்றிய ஜுக்கர்பெர்க் கருத்தை தொடர்ந்து மெட்டாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனத்துக்கு பார்லி குழு சார்பில் சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தியா உட்பட உலகளவில் பெரும்பாலான அரசுகள் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டதாக மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியிருந்தார். அவரது பேட்டி ஒரு பெரிய அரசியல் சர்ச்சையைத் தூண்டியது.மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜுக்கர்பெர்க் கருத்து தவறு என்று சுட்டிக்காட்டினார். அதை தொடர்ந்து மெட்டா நிறுவனம் பார்லிமென்ட் குழு சம்மனை எதிர்நோக்கியுள்ளது.இது குறித்து தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான பார்லி. நிலைக்குழுவின் தலைவரான பா.ஜ.,எம்.பி நிஷிகாந்த் துபே கூறியதாவது:, தவறான தகவல்களைப் பரப்பியதற்காக மெட்டா மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த தவறான தகவலுக்காக எனது குழு மெட்டாவை அழைக்கும். எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் தவறான தகவல்கள் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். இந்த தவறுக்காக அந்த அமைப்பு இந்திய நாடாளுமன்றத்திடமும் இங்குள்ள மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபலமான தளங்களை இயக்கும் மெட்டா, சர்ச்சைக்கு இன்னும் அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

PARTHASARATHI J S
ஜன 15, 2025 15:00

இப்படிப்பட்ட அவதூறு செய்திகளால் யாருக்கு என்ன லாபம் ? ஒரு கோடிக்கும் குறைவானவர்களே இந்த ஆஃப் பயன்படுத்துகிறார்கள். அப்படியே படித்தாலும் அதை உண்மை என நம்புவார்களா? இந்த மாதிரி விஷமத்தனமான பிரசாரம் பின்னர் இவர்கள் மேலேயே திரும்பலாம்.


Sampath Kumar
ஜன 15, 2025 10:26

வோட் மெஷினை கண்டுபிடித்த நாட்டுக்கே அது தேவையற்ற ஒன்றாகி விட்டது காரணம் கிளு முள்ளு தான் பழைய வாக்கு சீட்கு முக்கியத்துவம் ஏன் தந்தார்கள் என்று இங்கு கூவும் கூமுட்டைகள் பதில் சொல்லுங்கள் முடியாது உங்க தில்லு முள்ளு அம்பலப்பட்டு நிக்குது அதுக்கு முட்டு கொடுக்க அலையாதீர்கள்


பேசும் தமிழன்
ஜன 15, 2025 13:49

அப்படி பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி ......பிறகு உங்கள் விடியல் தலைவர் கட்சி ....மற்றும் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார்கள் வணக்கம் என்று கேள்வி கேட்பார்களே.. அதற்க்கும் ஏதாவது பதிலை தயார் செய்து வைத்து கொள்ளுங்கள்.


Ra ja
ஜன 15, 2025 08:40

என்னன்னே இப்படி பொசுக்குன்னு உண்மைய சொல்லிட்டே . எல்லா போலியையும் முடக்கணும்னு பொதுவா சொல்லுனே


J.V. Iyer
ஜன 15, 2025 04:17

இவங்களை சும்மாவிடக்கூடாது மணியண்ணே. தமிழக ஊடகங்களைப்போல காசுக்கு மாரடிக்கும் மெட்டா


கோமாளி
ஜன 15, 2025 04:08

பேஸ்புக்கில் இருப்பவர்கள் மட்டுமே வாக்காளர்கள் என்று மார்க் மாமா நினைத்துவிட்டார். அந்த தளத்தில் இல்லாதவர்கள் கருத்து என்ன என்பது பற்றி அவருக்கு தெரியாது


Kasimani Baskaran
ஜன 14, 2025 23:54

அதோடு லட்சக்கணக்கான தீம்க்கா ஐடி விங் பக்கிகள் கணக்குகளையும் நீக்கச்சொல்ல வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜன 14, 2025 23:53

சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் இஷ்டத்திற்கு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். சீனா போன்று தடை செய்வது, பொய் தகவல்களை பரப்புவதை தடுக்கமுடியும். அது ஜனநாயகத்தை காக்கும்.


Ramesh Sargam
ஜன 14, 2025 22:42

இந்திய அரசியலைப்பற்றி, இங்கு நடக்கும் தேர்தலை பற்றி நன்றாக புரிந்துகொண்டு பேசவேண்டும். உளறக்கூடாது Mr பெர்க்.


subramanian
ஜன 14, 2025 22:09

இந்திய விரோத கருத்துக்கள் வெளியிடுவது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நம் நாட்டை பற்றி கேவலமான பதிவு போட்டு மனதில் மகிழ்ச்சி அடையும் கயவர்கள் இவர்கள்.


கிஜன்
ஜன 14, 2025 22:07

டங் ஸ்லிப் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை