உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாருதி கார்களின் விலை மளமளவென குறைப்பு; எந்தெந்த மாடல்களுக்கு என்னென்ன விலை?

மாருதி கார்களின் விலை மளமளவென குறைப்பு; எந்தெந்த மாடல்களுக்கு என்னென்ன விலை?

சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக, மாருதி சுஸூகி கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அண்மையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரியை, 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றியமைத்தது. மேலும், 350 சிசிக்கு குறைவான பைக்குகள், 1200 சிசிக்கு குறைவான 4 சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்தது. இதன் காரணமாக, கார்களின் விலையை முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியிட்டு வந்தன. அந்த வகையில், தற்போது மாருதி சுஸூகி கார்களின் விலையையும் குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, Ex Showroom விலையில் இருந்து, மாடலை பொறுத்து, குறைந்தபட்சம் ரூ.46,000 முதல் அதிகபட்சம் ரூ.1,29,000 வரையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. செப்., 22ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி கார்களின் புதிய விலை இதோ!

மாடல் - புதிய விலை ((Ex Showroom)- குறைக்கப்பட்ட தொகை S presso - ரூ.3.5 லட்சம்- ரூ.1.3 லட்சம்Alto k10 - ரூ.3.7 லட்சம் - ரூ.1.1 லட்சம்Celerio - ரூ.4.7 லட்சம் - ரூ.94.1 ஆயிரம்Wagon R -ரூ. 5 லட்சம் - ரூ.79.6 ஆயிரம்Ignis - ரூ.5.3 லட்சம் - ரூ.71.3 ஆயிரம்Swift - ரூ.5.8 லட்சம் - ரூ.84.6 ஆயிரம்Baleno - ரூ.6 லட்சம் - ரூ.86.1 ஆயிரம்Dzire - ரூ.6.2 லட்சம் - ரூ.87.7 ஆயிரம்Ertiga - ரூ.8.8 லட்சம் - ரூ.46.4 ஆயிரம்XL6 - ரூ.11.5 லட்சம் - ரூ.52 ஆயிரம்Fronx - ரூ.6.8 லட்சம் - ரூ.1.1 லட்சம்Brezza - ரூ.8.2 லட்சம் - ரூ.1.1 லட்சம்Grand vitara-ரூ.10.8 லட்சம் - ரூ.1.1 லட்சம்Jimny - ரூ.12.3 லட்சம் - ரூ.51.9 ஆயிரம்https://x.com/dinamalarweb/status/1968891563762671968விலை குறைப்பு நடவடிக்கை இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையில், குறிப்பாக பட்ஜெட் மற்றும் சிறிய எஸ்யூவி வகைகளில் தேவையை புதுப்பிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த விலைக்குறைப்பு, பொதுமக்களின் கார் வாங்கும் திறனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலம் என்பதால், மாருதி கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

suresh Sridharan
செப் 20, 2025 09:02

தமிழ்நாட்டில் இல்லை என்றால் தமிழகத்திலிருந்து எங்கேயாவது பஞ்சம் பிழைக்க சென்று அங்கிருந்து சில போஸ்ட் போட வேண்டியது மத்திய அரசை குறை கூற வேண்டியது தமிழ்நாட்டில் பெட்ரோலுக்கு இருக்கும் ஜிஎஸ்டி பாதி குறைத்தால் போதும் பெட்ரோல் விலை 50 ரூபாய்க்கு வந்து விடும்


Venugopal S
செப் 19, 2025 17:55

பெட்ரோல் விலை அமெரிக்காவிலேயே இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் அறுபது ரூபாய்க்கு கிடைக்கிறது, சங்கிகளின் இந்த வாய்ச்சவடாலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை!


வாய்மையே வெல்லும்
செப் 19, 2025 21:01

பெட்ரோல் விலையை மட்டுமே ஒப்பிட்டால்.போதுமா.. ??. மற்ற வாழும் செலவையும் ஒப்பிட்டால் சரியாக இருக்கும். இந்தியாவில் சராசரியாக ஒரு குடும்பத்துக்கு இருபதாயிரம் இருந்தால் போதும்.. இது அமெரிக்காவில் ஒருவாரத்துக்கே போதாது. வேணு.. இன்னும் மூளையை கசக்கி உருப்படியான கேள்வியை கேளுங்க. உங்க ஆட்டத்துக்கு கோழிமுட்டை மார்க் தான் ...


Rajan A
செப் 19, 2025 15:16

ரோடு எங்கே இருக்கிறது


Mr Krish Tamilnadu
செப் 19, 2025 15:04

இன்னும் எத்தனை வருடத்திற்கு பெட்ரோல் கார்?. எலக்ட்ரிக்... சோலார் உடன் எலக்ட்ரிக் கார் போடுங்கள், அடிக்கிற வெயிலுக்கு அதுவே சார்ஜ் ஆயிரும். செலவு மிச்சம். பயணம் ஈசி. அதே மாதிரி, வீட்டு மேல பார்க் பண்ற மாதிரி லைட் வெயிட் போடுங்க. அப்புறம் போடுங்க இந்த நியூஸ் சா.


அப்பாவி
செப் 19, 2025 14:35

சீக்கிரமா இன்னிக்கே போய் ஒரு கார் வாங்கிட்டு வந்துருங்க. பணம் கையிலே, பையிலே எக்கச்சக்கமா புரளுதே.


வாய்மையே வெல்லும்
செப் 19, 2025 17:31

இஸ்லாமாபாத் ல இன்னும் விலை குறையவில்லை. உங்கள் நாட்டு பணம் இந்தியாவில் செல்லுபடியாகாது. அப்படியே திருட்டுத்தனமாக உள்ளெ நுழைய நினைத்தால் .. கம்பி எண்ண வேண்டி இருக்கும் பாக்கிஸ்தான் பாய்மாரே


Rameshmoorthy
செப் 19, 2025 13:27

Without parking at home, car should not be sold


Moorthy
செப் 19, 2025 11:57

குறைக்கப்பட்ட விலை பட்டியலை பார்த்து விட்டு முதல் முறை கார் வாங்குபவர்கள் கற்பனைகளுடன் கார் ஷோரூம் போகாதீர்கள். இது எஸ் ஷோரூம் விலைதான் குறைந்தபட்சம் 30% எக்ஸ்ட்ரா விலை சேர்க்கப்படும். ஆன் ரோடு விலை என்பது ரோடுடாஸ் ,,இன்சூரன்ஸ், பதிவு மற்றும் பார்க்கிங் சார்ஜ் சேர்ந்தது


duruvasar
செப் 19, 2025 12:40

அட இதுக்கு முன்னாடி நீங்க குறிப்பிட்ட இன்சூரன்ஸ் மற்ற இதர 30% எக்ஸ்ட்ரா விலை இல்லாம பிரீயா கிடைத்ததா? முதலில் ஆவின் பொருள்களின் விலை குறைக்க போகிறீர்களா இல்லையா? இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை..


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 19, 2025 14:22

கேஸ் சிலிண்டர் 100 மான்யம் இன்னும் கிடைக்கவில்லை.


சமீபத்திய செய்தி