உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் புழுதிப்புயல்; திடீர் வானிலை மாற்றம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டில்லியில் புழுதிப்புயல்; திடீர் வானிலை மாற்றம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. புழுதிப்புயல் ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.டில்லியில் இன்று திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. டில்லியில் காசியாபாத், நொய்டா உள்ளிட்ட பல பகுதிகள் புழுதிப் புயலால் பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் தூசி படிந்திருந்தது.புழுதிப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அலுவலகம் செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்தியா கேட் உட்பட டில்லியின் பல்வேறு பகுதிகளில் புழுதி புயலால் தூசி படிந்திருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனிடையே, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது. ஆபத்தான கட்டடங்கள் மற்றும் இடங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி