உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.2026ம் ஆண்டு பிறந்ததையொட்டி, உலகம் முழுவதும் புதிய ஆண்டை வரவேற்று மக்கள், பொது இடங்களில் ஒன்று கூடி, ஆடல், பாடல்களுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். புத்தாண்டில் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய மக்கள் கோவில்கள், தேவாலயங்களில் கூடினர்.மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் ஒரு அற்புதமான 2026ம் ஆண்டு அமைய வாழ்த்துகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் பலன் கிடைக்கட்டும். சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவ பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜன 01, 2026 16:46

மதத்தை வைத்து பாஜக கலவரம் செய்யாத வரை இந்தியா அமைதியாகத் தான் இருக்கும்.


SUBBU,MADURAI
ஜன 01, 2026 18:59

குண்டு வைக்காத வரை இந்தியா அமைதியாகத்தான் இருக்கும்.


Vasan
ஜன 01, 2026 14:00

ரஜினிகாந்த்: என்னது, இன்றைக்கு ஆங்கிலப்புத்தாண்டா ? ஓ .மை.காட்.


நாஞ்சில் நாடோடி
ஜன 01, 2026 12:13

திராவிட காட்டாட்சியை அகற்ற முயற்சி செய்கிறோம்...


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 01, 2026 09:53

இந்திய மக்களின் அமைதிக்கு நீங்களும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். நன்றி.


guna
ஜன 01, 2026 12:14

இனியாவது பொய்ஹிந்து திருந்தட்டும் என்று வேண்டுகிறோம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 01, 2026 16:21

பங்களாதேஷ் ஹிந்து நிலைமையா உனக்கு இந்தியாவுல இருக்கு...


Kasimani Baskaran
ஜன 01, 2026 09:13

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.


thulasiraman h
ஜன 01, 2026 09:08

ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை