மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago
புதுடில்லி: முதுகலை படிப்புகளில் சேரும் மாணவர்களை, விடுதியில் தங்கும்படி வற்புறுத்தக் கூடாது என, மருத்துவக் கல்லுாரிகளுக்கு, தேசிய மருத்துவ கமிஷன் எச்சரித்துள்ளது.தேசிய மருத்துவ கமிஷன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:முதுகலை மருத்துவ படிப்பு கட்டுப்பாடுகள் சட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட விதிகளை, மருத்துவக் கல்லுாரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.இந்த சட்டத்தின்படி, முதுகலை மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு உரிய விடுதி வசதிகளை கல்லுாரிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். அதே நேரத்தில், இந்த விடுதிகளில் தங்கியிருந்து தான் படிக்க வேண்டும் என அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.இந்த விதிகளை மீறி, பல கல்லுாரிகள் மாணவர்களுக்கு நிபந்தனைகள் விதிப்பதாகவும், விடுதியில் தங்குவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.சட்டத்தை மீறி செயல்பட்டால், கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிப்பதுடன், கல்லுாரிக்கான மாணவர் சேர்க்கை இடம் குறைப்பு அல்லது ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago