உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவ மாணவி மரணம்; கோல்கட்டாவில் மீண்டும் அதிர்ச்சி

மருத்துவ மாணவி மரணம்; கோல்கட்டாவில் மீண்டும் அதிர்ச்சி

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரியில் பயின்று வந்த மருத்துவ மாணவி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்த, 31 வயது பயிற்சி பெண் மருத்துவர், கடந்த ஆண்டு ஆக., 9ல் மருத்துவமனை வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலீஸ் நண்பர்கள் குழுவின் தன்னார்வலர் சஞ்சய் ராய்க்கு, கோல்கட்டா நீதிமன்றம் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதித்தது.இந்நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரியில் பயின்று வந்த மாணவி ஒருவர், தன் வீட்டில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள கமர்ஹாதி இ.எஸ்.ஐ., மருத்துவமனை குடியிருப்பில், தன் தாயாருடன் ஐவி பிரசாத் என்ற அந்த மாணவி வசித்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நீண்ட நேரமாக மொபைல் போனில் அழைத்தும் எந்த பதிலும் இல்லாத நிலையில், வீட்டுக்கு வந்து பார்த்த தாயார், மகள் இறந்து கிடந்தது குறித்து போலீசில் புகாரளித்தார். முதற்கட்ட விசாரணையில், மன அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் கொலை வழக்கு முடித்து வைக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், அங்கு பயிலும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Indian
பிப் 04, 2025 14:03

கற்பழிப்புக்கு, கடும் தண்டனை இல்லை என்றால் இப்படி தான் ,


sankaranarayanan
பிப் 04, 2025 08:25

எடுத்த உடனேயே இதுபோன்ற கொலைகளை தற்கொலை என்றே பூசி மொழிகி முடித்து விடுகிறார்கள் முழுவதும் ஆராய்ச்சி செய்து அலசி பார்த்து சொல்வதே கிடையாது எல்லாமே அரசியல் ஆதாரம் கருதி இது போன்ற வழக்குகளை எடுத்த உடனேயே தற்கொலை என்றே கூறி கதை முடிப்பது சந்தேகத்திற்கு வித்து வைக்கின்றது


Kasimani Baskaran
பிப் 04, 2025 07:17

எடுத்தவுடன் மன அழுத்தம்தான் காரணம் என்று முடிவு செய்வது ஞாயமில்லை - சுத்த பயித்தியக்காரத்தனமும் கூட.


crap
பிப் 04, 2025 09:57

"போலீஸ்காரர்கள் மன அழுத்தம் காரணமாக" என்று படிங்க, அர்த்தம் சரியா வரும்.


Senthoora
பிப் 04, 2025 05:00

முன்னர் கொல்லப்பட்ட மாணவியின் மர்மத்தை அறிந்திருப்பவர் போல இருக்கு, வெளியில் சொல்லிவிடுவாளோ என்று போட்டு தள்ளி இருக்கிறாங்க.


J.V. Iyer
பிப் 04, 2025 04:17

எப்போதாவது கற்பழிப்பு நடந்தால்தானே மக்கள் போராடுவார்கள்? இது தினமும் நடந்தால், பழகிவிடும் அல்லாவா? தூ.. இதெல்லாம் ஒரு அரசு.. வங்காளம், தமிழகம் எல்லாம் இருளகமாக, நரகமாக மாறிவருகிறது.. இதற்கு இவர்கள் மாடல். மக்கள் விழித்துக்கொள்ளாவிட்டால், உங்கள் வீட்டு பெண்களுக்கும் இது சீக்கிரம் நடக்கும். மற்றவர்களும் உங்களைப்போல கடந்துபோவார்கள். வோட்டு போடாமல் வீட்டில் இருப்பவர்களும், காசு வாங்கி வோட்டு போட்டவர்களும்தான் இதற்கு காரணம். ஒரு நல்ல அரசை தேர்ந்தெடுத்தால் இது நடக்குமா?


raja
பிப் 04, 2025 03:01

எப்போ மமதை கள்ள குடியேறிகள் ரோகன்கியாகளுக்கு ஆதரவு கொடுத்து ஓட்டு வங்கியை பலப்படுத்தி கொண்டதோ அப்போதிலிருந்தே அதன் அழிவு தொடங்கி விட்டது... தமிழகத்திலும் திருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிடர்களின் தொப்புள் கொடி உறவுகள் இப்போ பல "சார்" களாக பரிணமித்து கொண்டு இருக்கிறார்கள்...


Bye Pass
பிப் 04, 2025 01:50

அம்மணி ஆட்சியில் இப்படி நடக்கலாமா ?


முக்கிய வீடியோ