உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரை சந்திப்பது புது நம்பிக்கை கொடுக்கும்; ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் பேட்டி

பிரதமரை சந்திப்பது புது நம்பிக்கை கொடுக்கும்; ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கான்பூர்: நாட்டுக்காக செய்யப்படும் தியாகங்களுக்கு மிகவும் மதிப்பு கொடுக்கும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது புது நம்பிக்கையை கொடுப்பதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்.,22ம் தேதி நடந்த கோர சம்பவமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது, திருமணமாகி இரு மாதங்களே ஆன அசன்யா திவேதியின் கண்முன்னே, அவரது கணவன் ஷூபம் திவேதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சடலத்தின் அருகே அசன்யா அமர்ந்து இருந்த போட்டோ நெஞ்சை ரணமாக்கியது. இதனிடையே, பிரதமர் மோடி வரும் 30ம் தேதி கான்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, ஷுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் கூறியதாவது; கான்பூர் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று எம்.பி., ரமேஷ் அவஸ்தியிடம் கோரிக்கை விடுத்தோம். அவரும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த சூழலில் எங்களை சந்திக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தி எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. ஷூபமின் மரணத்தை தியாகச்செயலாக அறிவிக்க விரும்புகிறோம். நாட்டுக்காக செய்யப்படும் தியாகங்களுக்கு மிகவும் மதிப்பு கொடுக்கும் பிரதமர் மோடி எங்களின் கோரிக்கையை ஏற்பார் என்று நம்புகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
மே 24, 2025 21:28

இந்திய நாட்டு மக்களுக்கே நம்பிக்கை கொடுப்பவர் மோடி அவர்கள்.


spr
மே 24, 2025 19:03

இவரது இழப்பிற்காக மனம் வருந்துகிறோம் .நாடே போராடிக் கொண்டிருக்கிறது ஆனாலும் "ஷூபமின் மரணத்தை தியாகச்செயலாக அறிவிக்க விரும்புகிறோம்." என்று கோருவது அரசியல் மலினம். இந்திய ராணுவத்தைப் போல நாட்டுக்காகப் போராடி அவர் உயிர் துறக்கவில்லை அவருக்கு ஏற்பட்டது விபத்து.அவ்வளவே.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 24, 2025 21:09

விபத்து என்பது தற்செயலாக நடப்பது. திட்டமிட்டு செய்யப்படுவது கொலை குற்றம். எதிர்பார்ப்பு ஏதும் இன்றி சிறு மனித தவறு அல்லது இயந்திரங்கள் பழுதால் நடப்பது விபத்து. ஒரு குறிக்கோளோடு ஒரு தனி மனித கொள்கை அல்லது குறிப்பிட்ட சமூகம் சார்ந்த கொள்கை அல்லது ஒரு குழுவின் இலட்சியத்திற்காக அல்லது குறிப்பிட்ட இனத்தவரை திருப்திபடுத்த அல்லது ஒரு இனத்தவரை பயமுறுத்த, அச்சுறுத்தி அடிமைப்படுத்த நினைத்து நிராயுதபாணியாக இருக்கும் சிலரை , பலரை குழுவாக அல்லது தனித்தனியாக பலரும் அறியும் வண்ணம் எதிர்பார்க்காத சமயத்தில் தாக்கி உயிரை பறிப்பது பயங்கரவாத செயல். அதை நிதழ்த்துபவர்களை பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவர்.


Barakat Ali
மே 25, 2025 18:59

ராணுவத்தைச் சேர்ந்தவர் பயங்கரவாதச் செயலால் கொல்லப்பட்டால் அதுவும் தியாகமாகவே பார்க்கப்படவேண்டும் .... அவர் பணியில் இல்லாத நேரத்தில் கொல்லப்பட்டாலும் .... இந்திரா, ராஜீவ் ஆகியோரும் கூட தியாகிகளாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பதை நினைவில் கொள்க ....


HoneyBee
மே 24, 2025 18:28

கண்டிப்பாக மோடிஜி உங்கள் ஆசையை நிறைவேற்றுவார் சகோதரி


சமீபத்திய செய்தி