உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெகா ஊழல் முதல்வர்ன்னா... அது அவரு மட்டும்தான்: போட்டுத்தாக்கினார் ராஜ்நாத் சிங்

மெகா ஊழல் முதல்வர்ன்னா... அது அவரு மட்டும்தான்: போட்டுத்தாக்கினார் ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: 'இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் முதல்வராக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளார்,' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.இந்தாண்டு இறுதியில், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, அதற்கு தயாராகும் வகையில், இன்று பா.ஜ., பரிவர்தன் யாத்ரா ஊர்வலம் அந்த மாநிலத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றினார்.பின்னர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஹேமந்த் சோரன், மிகப்பெரிய ஊழல் முதல்வர். அவர், இந்தியாவின் சக்திவாய்ந்த ஜனநாயகத்தை, ஊழலால் கறைபடிய வைக்கிறார். இந்தியா, இது போன்ற மனிதர்களை ஏற்றுக்கொள்ளாது. இதனால், மாநிலத்தில் பா.ஜ., தலைமையிலான அரசை அமைக்க வேண்டும். ஹேமந்த் சோரன் அரசு மாற்றப்பட வேண்டும்.ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜே.எம்.எம்) காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.ரோஹிங்யா, வங்கதேச முஸ்லிம்கள் குறித்து, பா.ஜ.க., எடுத்து வரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் மாநில அரசு குற்றம் செய்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல், அமெரிக்கா சென்று இந்தியாவை குறை கூறி பேசினார். இந்தியாவில், சீக்கிய சமூகத்தினருக்கு, பாதுகாப்பு இல்லை என பேசினார். வெளிநாடுகளில், இந்தியாவின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டு பேசுகிறார். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 22, 2024 06:56

பின்ன ???? நானு யார் நாணயத்தை வெளியிட்டேனோ அவருதான் ன்னு உண்மையையா சொல்ல முடியும் ?????


xyzabc
செப் 22, 2024 05:47

சார் ரேங்க் போடுறப்ப எங்க தலையை மறக்க வேண்டாம்


Indhuindian
செப் 22, 2024 05:42

என்ன அய்யா இது இப்படி நம்மளை கவுத்துடீங்களே தீர்ப்பை மாத்தி சொல்லுங்க எங்க வூரை மறந்துடாதீங்க


அப்பாசாமி
செப் 22, 2024 05:39

சௌக்கிதார் என்ன செய்யறாரு?


Natarajan Ramanathan
செப் 21, 2024 23:07

பாவம் ராஜ்நாத் சிங். நம்ம தீயசக்தியை பற்றி அறியாதவர். அவர் செய்த ஊழலை இனிமேல் யாராலும் செய்யவே முடியாது. சுடலையை தவிர


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 21, 2024 23:28

ஷம்பு சோரன் முதல்வர் இப்ப தான் பிஜேபி யில் சேர்ந்தார் , திருப்பதி லட்டு விஷயம் பிஜேபி ஆட்சியே கவிழ போகுது ?


Sivagiri
செப் 21, 2024 22:58

ம்ம்ஹ்ம் . . இந்தியான்னா - உபி- கிட்ட இருக்கிற நாலு ஸ்டேட் மட்டும்னு நினைத்து கொண்டிருக்கார் போல , இங்க மேகாவுக்கெல்லாம் மெகா எல்லாம் இங்கிட்டு இருக்காய்ங்க-ன்னு தெரியாது போல


Mohdgilani
செப் 21, 2024 21:08

Narayana is not getting 200 these days ...I think only 100...paavam..romba thakkadheenga..


Mohdgilani
செப் 21, 2024 21:05

சூப்பர் மெகா விஞ்ஞான ஊழல் என்றால் நம்ம கட்டுமரத்தை அடிச்சுக்க முடியாது.


ராமகிருஷ்ணன்
செப் 21, 2024 21:02

சோரனின் மந்திரிகள் யாராவது 908 கோடிகளை அபராதமாக கட்டி உள்ளார்களா. 28000 கோடிகளை போட்டு வெளிநாடுகளில் தொழில் தொடங்கி உள்ளார்களா. எத்தனை அமைச்சர்கள் ஜெயிலில் இருக்காங்க. எத்தனை அமைச்சர்கள் மேல் கேஸ் நடக்குது. இதெல்லாம் யோசித்தால் நெம்பர் 1 நம்ம முதல்வர் தான்.


Dharmavaan
செப் 21, 2024 21:42

இதற்கு காரணம் உச்ச நீதியின் திமுக மீது கரிசனம் .வேலியே பயிரை மேயும்போது நீதி எங்கிருக்கும்


Jysenn
செப் 21, 2024 20:51

சோரன் என்பார்கள் கெஜ்ரிவால் என்பார்கள் " இவர்" பெருமை அறியாதார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை