உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீக் ஹவர்சில் கூடுதல் ரயில்கள் மெட்ரோ நிறுவனம் முடிவு

பீக் ஹவர்சில் கூடுதல் ரயில்கள் மெட்ரோ நிறுவனம் முடிவு

பெங்களூரு : மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, கருடாச்சார் பாளையா மெட்ரோ ரயில் நிலையம் வரை, கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து, பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வெளியிட்ட அறிக்கை:பயணியரின் வசதிக்காக, கெம்பே கவுடா மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, கருடாச்சார்பாளையா மெட்ரோ ரயில் நிலையம் வரை, கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பாதையில் பயணியர் எண்ணிக்கை அதிகம். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை கருத்தில் கொண்டு, பீக் ஹவர்சில் அதாவது காலை மற்றும் மாலையில், கெம்பேகவுடா மெட்ரோ நிலையம் முதல், கருடாச்சார் பாளையா ரயில் நிலையங்களுக்கு இடையே, பிப்ரவரி 26 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.கூடுதல் ரயில்கள் இயக்குவதால், டிரினிட்டி, இந்திரா நகர், பென்னிகானஹள்ளி, கே.ஆர்., புரம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணியருக்கு உதவியாக இருக்கும். சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், மூன்று நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கும்.மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, அனைத்து திசைகளிலும், ஞாயிறு தவிர மற்ற நாட்களில் அதிகாலை 5:00 மணிக்கே மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ