உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் பலி

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் பலி

பாங்காக்: மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.நம் அண்டை நாடான மியான்மரில், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து, 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ரக்கைன் பிராந்தியம் மோசமாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த 7.4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு அகதியாக சென்றனர். இதையடுத்து ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய பழங்குடியின குழுக்கள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.இந்நிலையில், ரத்தின சுரங்கத் தொழிலின் மையமான மொகோக் நகரில் கிளர்ச்சியாளர்கள் தங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், ஒரு கர்ப்பிணிப்பெண் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். ராணுவம் நடத்திய தாக்குதலை ஆயுதமேந்திய எதிர்க்கட்சி குழு, உள்ளூர்வாசிகள் உறுதி செய்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ராணுவம் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஆக 17, 2025 15:16

இதே போல முன்பு இந்திரா ஆட்சிக்காலத்தில் மிசோரம் தலைநகர் ஐஸ்வால் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. . சொந்த நாட்டுக்குள்ளேயே விமானத் தாக்குதல் நடத்திய தவறு முதன்முதலாக அப்போதுதான் நடந்தது.


நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2025 13:11

எந்த வெளிநாடு என்று எழுத பயம், இந்தியாவிற்கு உள்ளே வர ஒரு மோசக்கார மர்ம மனிதர்கள் உதவினார்கள், அதற்க்கு அவர்கள் அஸ்ஸாமியர்கள் என்று எழுதினார்கள், வந்து செட்டில் ஆனபின்னர் கஞ்சா மாதிரியான கடத்தல்கள் அதிகரித்து உள்ளன என்பதனை உங்களால் மறுக்க முடியாது


Nada raja
ஆக 17, 2025 12:56

இது தீராத பிரச்சனை ஆகும்


புதிய வீடியோ