மடகாஸ்கரில் ராணுவ ஆட்சி
அன்டனனாரிவோ: கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கர், உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று. நீண்டகாலமாக நிலவிவரும் கடுமையான மின்வெட்டு மற் றும் குடிநீர் தட்டுப் பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதைக் கண்டித்து, தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தினர். இவர்களுக்கு ராணுவம் ஆதரவளித்தது. மடகாஸ்கரின் தேசிய துணை ராணுவப் படையான ஜென்டர்மேரியும் போராட்டக்காரர்களுடன் இணைந்தது. இதனால் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர், நாட்டைவிட்டுத் தப்பிச் சென் றார். இதையடுத்து ராணுவ தளபதியான கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். மடகாஸ்கரின் அதிபராக அவர் நேற்று பதவிஏற்றுக்கொண்டார்.