மேலும் செய்திகள்
இது எந்த ஊர் நியாயம்?
30-Oct-2024
தார்வாட்: ''பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது, ஷிகாவி சட்டசபை தொகுதிக்கு எந்த பங்களிப்பும் அளிக்கவில்லை. எந்த முகத்தை வைத்து கொண்டு அங்கு ஓட்டு கேட்கிறார் என்று தெரியவில்லை,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கேள்வி எழுப்பி உள்ளார்.ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஷிகாவி சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த பசவராஜ் பொம்மை எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளவில்லை. அங்குள்ள இளைஞர்கள் மைதான வசதி கேட்டு கோரிக்கை விடுத்தும், பா.ஜ.,வால் கட்டித்தர முடியவில்லை. வளர்ச்சி பணிகளை செய்யாமல், இளைஞர்கள், விவசாயிகளிடம் ஓட்டு கேட்கின்றனர்.இடைத்தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும் காங்கிரசின் அலை வீசுகிறது. வேட்பாளர்கள் தனி பெரும்பான்மை பெற்று, வெற்றி பெறுவர். ஊழலற்ற வளர்ச்சி பணி செய்து நிரூபித்துள்ளோம்.விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.,வினர், எதையும் செய்யாமல் ஏமாற்றினர். நாங்கள் ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, இடைத்தேர்தலில் ஓட்டு கேட்டு வருகிறோம். பா.ஜ.,வின் வார்த்தைகளை நம்பி, வாக்காளர்கள் ஏமாற மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
30-Oct-2024