கலெக்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அமைச்சர் ஜமீர்
பல்லாரி; ''மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று, அங்குள்ள கலெக்டர்களை மிரட்டி, விவசாயிகளின் நிலங்களுக்கு வக்பு சொத்து என, நோட்டீஸ் அளிக்கும் படி அமைச்சர் ஜமீர் அகமது கான் நெருக்கடி கொடுக்கிறார்,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.பல்லாரியின் சண்டூர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் பங்காரு ஹனுமந்துவுக்கு ஆதரவாக, தொண்டர்களுடன் விஜயேந்திரா நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இதில் அவர் பேசியதாவது:அமைச்சர் ஜமீர் அகமது கான், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறார். அந்தந்த மாவட்ட கலெக்டர்களை மிரட்டி, விவசாயிகளின் நிலத்துக்கு வக்பு சொத்து என, நோட்டீஸ் கொடுக்க வைக்கிறார்.கோவில்கள், மடங்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார். சமுதாயங்களுக்கு இடையே தீ மூட்டும் வேலையை செய்யும், ஜமீர் அகமது கான் போன்ற அமைச்சரை, மாநிலத்தில் விட்டு வைக்க கூடாது. எல்லையை விட்டு வெளியேற்ற வேண்டும். இவரை போன்ற அமைச்சர்களால், மாநில வளர்ச்சி சாத்தியமா. மக்களின் கண்ணீரை துடைக்க முடியுமா. இவ்வாறு அவர் பேசினார்.