வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெங்களூரில் ஐ.டி தொழில் வளர்ந்ததே அயல்நாட்டு கல்வியாலும், ஆங்கிலத்தாலும் தான். இல்லேன்னா அந்தக்கால பெங்களூர் மாதிரி தூங்கி வழிஞ்சுக்கி ட்டிருக்கணும்.
மைசூரு: வெளிநாட்டு கல்வி முறை அமைச்சர் எதிர்ப்பு
உயர் கல்வித் துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் மைசூரில் நேற்று அளித்த பேட்டி: வெளிநாட்டு விஷயங்களை, இங்கு திணிப்பது பேஷனாகிவிட்டது. நம் நாட்டு கல்வித் திட்டத்தில், வெளிநாட்டில் உள்ள முறையை கொண்டு வருவது சரியல்ல.நம்மிடம் விரிவுரையாளர்கள், பயிற்றுனர்கள் பற்றாக்குறை உள்ளது. பல பல்கலைக்கழகங்களில் உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், வெளிநாடுகளின் கல்வி முறையை கடைபிடிப்பது எந்த வகையில் சரியாகும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு, மாநில அரசின் பொறுப்பு என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல விஷயங்களில், மாநில அரசின் அதிகாரத்தை குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு பதில் அளிப்பது மாநில அரசின் பொறுப்பு, மத்திய அரசின் பொறுப்பு அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரில் ஐ.டி தொழில் வளர்ந்ததே அயல்நாட்டு கல்வியாலும், ஆங்கிலத்தாலும் தான். இல்லேன்னா அந்தக்கால பெங்களூர் மாதிரி தூங்கி வழிஞ்சுக்கி ட்டிருக்கணும்.