மேலும் செய்திகள்
போட்டி தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்தது என்.டி.ஏ.,
4 hour(s) ago
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
4 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
4 hour(s) ago
துமகூரு: ''பா.ஜ., - எம்.பி., பசவராஜை சந்தித்து பேசியதற்கு, வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். அவரும், நானும் பல முறை சந்தித்திருக்கிறோம். நேரம் கிடைக்கும் போது, நட்பாக பேசுவோம். ஆனால் அரசியல் குறித்து பேச மாட்டோம்,'' என கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார்.துமகூரில் நேற்று அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், துமகூரு தொகுதியில் சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்த முத்த ஹனுமேகவுடா போட்டியிட வாய்ப்புள்ளது. அவரை காங்கிரசுக்கு அழைத்து வந்தவர்களே, சீட் கிடைக்க செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன்.அனைவரும் கலந்தாலோசித்த பின்னரே, ஒருமித்த கருத்துடன் முத்த ஹனுமேகவுடாவை காங்கிரசில் சேர்த்தோம். லோக்சபா தேர்தலில் போட்டியிட பாரதி சீனிவாஸ், கவுரி சங்கர் உட்பட, 20 பேர் சீட் கேட்கலாம். ஆனால் காங்., மேலிடம், மாநில தலைவர்களுடன் ஆலோசித்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும். முத்த ஹனுமேகவுடாவுக்கு சீட் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.முரளிதர ஹாலப்பா, தன் தொகுதியில் ஒரு ஓட்டு போட்ட உதாரணத்தை காண்பியுங்கள். அவர் யார், அவரை ஏன் ஊடகத்தினர் பெரிதுபடுத்துகிறீர்கள். பா.ஜ., சார்பில் முன்னாள் அமைச்சர் சோமண்ணா போட்டியிட்டால், நான் வரவேற்கிறேன். அவர் என் நண்பர். அவருக்கு நல்லது நடக்கட்டும்.நான், பா.ஜ., - எம்.பி., பசவராஜை சந்தித்து பேசியதற்கு, வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். அவரும், நானும் பல முறை சந்தித்திருக்கிறோம். நேரம் கிடைக்கும் போது, நட்பாக பேசுவோம். ஆனால் அரசியல் குறித்து பேச மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago