உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலில் விழுந்தால் வேலை நடக்காது! வேற லெவலில் ஆர்டர் போட்ட மத்திய அமைச்சர்

காலில் விழுந்தால் வேலை நடக்காது! வேற லெவலில் ஆர்டர் போட்ட மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: காலில் விழுந்து வணங்கினால் எந்த வேலையும் செய்து கொடுக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் ஒருவர் நூதன உத்தரவை போட்டுள்ளார்.வட இந்தியாவில் பொதுவாக ஒரு கலாசாரம் உண்டு. தம்மை விட வயதில் முதிர்ந்தவர்கள், தாம் பெருமையாக நினைப்பவர்கள், நாம் மதிப்பவர்கள் ஆகியோரின் கால்களை தொட்டு வணங்குவது வழக்கம். அவர்களை அன்றைய நாளில் எத்தனை முறை சந்தித்தாலும் இந்த வழக்கத்தை அவர்கள் பின்பற்றி வருகின்றனர். இதே வழக்கம், அரசியல் தலைவர்களை காணும் தொண்டர்களுக்கும் உண்டு. தலைவர்களை அமைச்சர்களை எங்கு பார்த்தாலும் அவர்களை பாதம் தொட்டு ஆசீர்வாதம் வாங்கி செல்லுவர். இந் நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் இனி யாரும் எனது காலை தொட்டு வணங்கினால் அவர்களுக்கான எந்த வேலையும் யாரும் செய்து தரக்கூடாது என்று புதுமாதிரியான உத்தரவை போட்டுள்ளார். அந்த அமைச்சர் பெயர் வீரேந்திர குமார். 1996ம் ஆண்டு முதல் எம்.பி.யாக வெற்றி பெற்று வருகிறார். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திகம்கர்க் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக இருக்கிறார்.திகம்கர்க் தொகுதியில் உள்ள தமது எம்.பி., அலுவலகம் வரும் மக்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என யாரும் தனது பாதம் தொட்டு வணங்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதை மீறி யாரேனும் அப்படி செய்தால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாது என்றும் கறாராக கூறி இருக்கிறார். அமைச்சரின் கறார் உத்தரவை அறிந்த பொதுமக்கள் பெரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். எதற்காக இந்த உத்தரவு என்றும் அவர்களுக்காகவே கேள்வியையும் எழுப்பியபடி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
டிச 30, 2024 22:25

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வயதில் சிறியவர்கள் ஆனாலும் பிராமணர்கள் காலில் மற்ற தாழ்த்தப்பட்ட ஜாதியினர் காலில் விழுவதை அவர்கள் கலாச்சாரமாக கொண்டு உள்ளனர்.நான் கான்பூர் நகரில் வேலை செய்த காலகட்டத்தில் நேரிடையாக பார்த்து உள்ளேன்!


PR Makudeswaran
டிச 30, 2024 19:17

ராமசாமி நாயக்கர் வடக்கில் இல்லை. ஒரு சிலருக்கு தோன்றுகிறது. அவர்கள் நினைப்பு அது மாதிரி


Mohan
டிச 30, 2024 17:08

என்னப்பா பெரிய எழவாப்போச்சு யாரைப்பார் பெரியார், பெரியார் என்கிறீர்களே உலகத்தில் உள்ள அத்தனை பேரையும் அறிவற்றவர் என சொன்ன அதி மேதாவி காசே குறிக்கோளாயிருந்த மனிதன் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை வேண்டாம் அடிமையாய் இருப்போம்னு சொன்ன அதி புத்திசாலி. கல்யாணமே பண்ணாம ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்க வேணும், பெண்கள் புரட்சி பண்ணனும் என்று சொன்னதால அவரை ஆகாயத்துல தூக்கிவச்சி, பெண்விடுதலையே இவரால தான் கிடைச்சதுன்னு சொல்லி, பெண் விடுதலைக்கு பாடுபட்டவங்களை குழியில தள்ளும் இவரது தொண்..டர்..கள் வேண்டுமானால் பாராட்டட்டும். சக மனிதனை மதிக்காமல், அவர்களது நம்பிக்கைகளை எள்ளி நகையாடிய தன்னலமான அரசியல்வாதியான இவரை நாட்டு சுதந்திரத்திற்கு ஒரு சிறு துரும்பும் கிள்ளிப்போடாத, கொண்டாடும் தலைமைப் பண்புகள் இல்லாத திமுக தலைகள் கொண்டாடட்டும். மக்களே இவரை தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்கள் அங்கே ஒன்றும் இல்லீதவர்களஞ


அப்பாவி
டிச 30, 2024 14:47

நீ குடுக்கலேன்னா என்ன? இன்னொருத்தன் காலில் விழுந்து சாதிச்சுருவோம.


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 30, 2024 13:47

ஒருவரை ஒருவர் தொடாமல், அரசு ஊழியர்களின் காலில் விழாமல் வணக்கம் இரண்டு கைகளையும் கூப்பி வணங்கும் முறை நமது சனாதன கலாச்சாரத்தில் உள்ளது. பெண்கள் குழந்தையை வயிற்றில் சுமப்பதால் அவர்களை நெஞ்சுக்கு சற்று கீழாக கைகூப்பி வணங்க வேண்டும். ஆண் தன் குழந்தையை நெஞ்சில் சுமப்பதால் அவர்களை நெஞ்சுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். நமக்கு அறிவை கொடுக்கும் ஆசிரியர்களை முகத்துக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். அனைத்துக்கும் மேலான இறைவனை இரண்டு கைகளையும் தலைக்கு மேலாக உயர்த்தி கைகூப்பி நேராக வணங்க வேண்டும். நம்மை பெற்றவர்கள், நமது வயதில் முதிர்ந்த உறவினர்கள், ஆசிரியர் மற்றும் கடவுள் தவிர வேறு யாரையும் காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை.


Karthik
டிச 30, 2024 17:29

அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றை , புரியும் விதம் தெளிவாக விளக்கிய உங்கள் கருத்துக்கு நன்றி Mr Bharat..


N.Purushothaman
டிச 30, 2024 12:41

நமஸ்கரிக்கும் போது ஆசி வழங்க நேரிடுவதால் இந்த ஏற்பாடு இருக்கலாம் ...


sankaranarayanan
டிச 30, 2024 12:30

இங்கே திராவிட ஆட்சியில் யாரும் காலில் விழமாட்டார்கள் ஆனால் விழுவது போன்று விழுந்து அடுத்தவர்கள் காலை இழுத்து விடுவார்கள்


சாண்டில்யன்
டிச 30, 2024 12:16

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக பொருத்தமானவர்தான் பெரியார் வடக்கிலும் பரவுகிறார் மற்றவர்கள் ஞானம் பெறுவதெக்காலம்?


Suppan
டிச 30, 2024 14:20

ஞானம் வேண்டாம். அதெல்லாம் அந்த 21 ம் பக்கக் காரங்களுக்குத்தான்.


sundar
டிச 30, 2024 17:48

வளர்த்த பெண்ணையே திருமணம் செய்யும் வழக்கத்தை ஆதரிக்க வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை