உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமி பலாத்காரம்: சுற்றுலா வழிகாட்டி போக்சோவில் கைது

சிறுமி பலாத்காரம்: சுற்றுலா வழிகாட்டி போக்சோவில் கைது

மூணாறு: மூணாறில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சுற்றுலா வழிகாட்டி மிடில் டிவிஷனை சேர்ந்த சுபாைஷ 30, மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்கு சொந்தமான லட்சுமி எஸ்டேட் மிடில் டிவிஷனை சேர்ந்தவர் சுபாஷ் 30. இவர் துவக்கத்தில் ஆட்டோ ஓட்டிய நிலையில் தற்போது சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். இவர் பள்ளி மாணவியான 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பள்ளியில் நடந்த கலந்தாய்வின் போது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. மூணாறு போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பினோத்குமார் தலைமையில் போலீசார் விசாரித்து சுபாஷை 'போக்சோ'வில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை