உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க 2வது நாளாக தடை விதிப்பு!

அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க 2வது நாளாக தடை விதிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போர்ட் பிளேர்: அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இதனால் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.அந்தமானில் இந்தியா மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. சமீபத்தில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. தற்போது, முப்படைகளின் உத்தரவின் பேரில், அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இதனால் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றிய 500 கிலோமீட்டர் நீள வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மே 16ம் தேதி விமானப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2வது நாளாக இன்றும் (மே 24) அந்தமானில் எந்த சிவிலியன் விமானமும் பறக்க அனுமதிக்கப்படாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.காலை 7 மணி முதல் 10 மணி வரை அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றிய 500 கிலோமீட்டர் நீள வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

karthikeyan
மே 23, 2025 15:26

நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் பாதுகாப்பதில் அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அதில் எந்த கருத்து வேறுபட்டு இல்லை ஆனால் நமது வீட்டினுள் அந்நியன் யாராவது நுழைந்தால் சும்மா இருப்போமா? அந்த நாட்லேயும் மக்கள் இருகிறார்கள் எல்லையை மதித்து நம் மக்களின் உயர்வுக்கு என்ன வழியுண்டோ அதை செய்ய வலியுறுத்துவோம்.


Murthy
மே 23, 2025 14:29

தமிழக மீனவர்களை பாதுகாக்க துப்பில்லை.. வாணவேடிக்கை காட்டுவதால் ஒரு பயனும் இல்லை ....


N Sasikumar Yadhav
மே 23, 2025 15:18

உங்க மானங்கெட்ட ஊழல்வாத இத்தாலிய கான்கிராஸ் ஆட்சியில் எத்தனை மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் இப்போது எத்தனை மீனவர்கள் . பாரதம் எதாவது சோதனை செய்தால் உடனே வாயை எடுத்து கொண்டு வந்து விடுவீர்கள் பேச .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை