உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.எல்.ஏ., விலை 50 கோடி ரூபாய்; கேரளா அரசியலில் பரபரப்பு!

எம்.எல்.ஏ., விலை 50 கோடி ரூபாய்; கேரளா அரசியலில் பரபரப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: இடது முன்னணி அரசை ஆதரிக்கும் இரு எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 50 கோடி ரூபாய் விலை பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில உதிரி கட்சிகள், மார்க்சிஸ்ட் ஆதரவு சுயேச்சைகள் இடம் பெற்றுள்ளனர். இடது முன்னணி அரசை ஆதரிக்கும் ஆர்.எஸ்.பி.,(எல்) கட்சி எம்.எல்.ஏ., கோவூர் குஞ்சுமோன், ஜனாதிபத்ய கேரளா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆண்டனி ராஜு ஆகிய இருவருக்கும் தலா 50 கோடி ரூபாய் லஞ்சம் தர, இடது முன்னணியில் இருக்கும் இன்னொரு எம்.எல்.ஏ., தாமஸ் முன் வந்தார் என்பது குற்றச்சாட்டு. தற்போது தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியில் இருக்கும் தாமஸ், அஜித் பவார் அணியில் எம்.எல்.ஏ.,க்களை சேர்ப்பதற்காக லஞ்சம் தர முன்வந்தார் என்பது குற்றச்சாட்டு.எம்.எல்.ஏ., ஆண்டனி ராஜூ இந்த குற்றச்சாட்டை கூறினார். தகவல் அறிந்த முதல்வர் பினராய் விஜயன், குற்றச்சாட்டுக்கு ஆளான தாமஸிடம் நேரடியாக விசாரித்தார். தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த தாமஸ், தனக்கு இடது முன்னணி அரசியல் அமைச்சர் பதவி கிடைப்பதை தடுக்கவே, இத்தகைய குற்றச்சாட்டை கிளப்பி இருப்பதாக கூறியுள்ளார். 50 கோடி ரூபாய் விலை பேசப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான குஞ்சுமோன், அதை மறுத்துள்ளார்; எம்.எல்.ஏ., ஆண்டனி ராஜு தாம் கூறிய குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறார்.இது பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரும் அரசை வலியுறுத்தியுள்ளனர். கேரளா அரசியலில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

lana
அக் 26, 2024 18:11

என்னப்பா அநியாயம். ஒரு எம்எல்ஏ க்கு 50 கோடி யா. இங்கே மொத்த கட்சி உம் 25 கோடி க்கு easy யா கிடைக்கும். வேணும் நா broker commission குடுத்தா எங்க சின்னவன் சிறப்பாக ஆள் வைத்து முடித்து குடுப்பாங்க. ஹிந்தி வேண்டாம் ன்னு ஹிந்தி படத்தை ரிலீஸ் பண்ண வில்லை யா. அதே மாதிரி தான் இதுவும். நாங்கள் அதை எல்லாம் செய்வது இல்லை அப்படி ன்னு உருட்டி விளையாடுவார் கள். ஆனா காசுக்கு gun மாதிரி வேலை செய்வார்கள்


Lion Drsekar
அக் 26, 2024 17:31

இவைகளை எல்லாம் தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது, லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் தடுப்பு பிரிவு, குற்றப்பிரிவு எல்லாம் இருந்தாலும் செயலாற்ற முடியாத நிலையில் குறுநில மன்னர்களின் காலடியில் வீழ்ந்து கிடைப்பதால் வரும் வினைதான், இந்த பணத்தை எப்படி வாங்குவார்கள், எங்கு வைப்பார்கள், எப்படி கணக்கு திட்டுவார்கள் என்பதும் எல்லோரும் தெரியும், நீதித்துறை தானாக முன்வந்து மக்களைக் காப்பாற்ற முடியாது , பதவியில் அமர்த்திய தேர்தல் கமிஷன் மட்டுமே முழு பொறுப்பு , வந்தே மாதரம்


Keshavan.J
அக் 26, 2024 14:55

AS A SANGHI, I AGREE SAI PRAKASH, ARE YOU HAPPY. BE A SLAVE TO DRAVIDIYA PASANGA


KRISHNAN R
அக் 26, 2024 14:03

தாங்கள் புனிதமான வர்கள்...என்று....இனியும் பீலா விடுவார்களா


Duruvesan
அக் 26, 2024 13:01

என்னபா இது, நம்ம காவிங்க தான் இப்படி பண்ணும்னு பார்த்தா எல்லாரும் ரொம்ப நல்லவனா இருக்காங்க


M Ramachandran
அக் 26, 2024 12:31

சே 50 கோடி தமிழக MLA க்களுக்கு இந்த பணம் ஜுஜுபி. அமைச்சர்களுக்கு தன்னுடன் சுற்றும் கும்பலுக்கு கூட கேவலம்


saiprakash
அக் 26, 2024 12:28

எம்பி ,எம் எல் ஏ களை குதிரை பேரம் மூலம் கோடிக்கணக்கில் விலைவைத்து ஆட்ச்சியை கவிழ்ப்பது ,உருவாக்குவது இது எல்லாம் 2014 க்கு அப்புறம் பிஜேபி ஆட்சிக்கு வந்ததுக்கு பின்னர்தான் அதிகமானது இதை மனச்சாட்சி உள்ள சங்கிகள் ஒத்துக்கொள்ள வேண்டும்


Mettai* Tamil
அக் 26, 2024 15:01

அப்படியே ஓட்டுக்கு பணம் பொருள் கொடுத்து வாங்கும் கலாச்சாரத்தையும், விஞ்ஞான ஊழல் கலாச்சாரத்தையும் தி மு க தான் உருவாக்கியது என்பதையும் சொன்னால், அதே மனச்சாட்சி உள்ள குறைஞ்சது 200 உ பி கள் ஒத்துக்கொள்வீங்களா ?....


நிக்கோல்தாம்சன்
அக் 26, 2024 15:57

சர்க்காரியா சர்க்காரியா என்றொரு பாட்டு உள்ளது


sankaranarayanan
அக் 26, 2024 11:13

கேரளா கம்யூனிஸ்டுகளே இவ்வளவு பணக்கார லிஸ்டில் இருக்கும்போது காங்கிரசுக்காரர்கள் உத்தேசமாக என்ன விலைக்கு போவார்கள் இரண்டு மடங்கா அல்லது பன்மடங்கா தெரியவில்லையே


கண்ணன்
அக் 26, 2024 10:00

கம்யூ சேட்டன்களின் சேட்டைகள்… கம்யூக்களே பொதுவாக ஊழல்வாதிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை