| ADDED : ஜன 29, 2024 10:55 PM
பீதர்: “மத்திய அமைச்சர் பகவந்த் கூபாவுக்கு மீண்டும் 'சீட்' தர வேண்டாம்,” என கூறி, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா காலில், அக்கட்சி எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் விழுந்தார்.பீதர் தொகுதி பா.ஜ., - எம்.பி., பகவந்த் கூபா. மத்திய ரசாயன, உரத்துறை இணை அமைச்சராக உள்ளார். இவருக்கும், பீதரின் அவுராத் தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹானுக்கும் மோதல் போக்கு உள்ளது.சட்டசபை தேர்தலில் தன்னை தோற்கடிக்க முயன்றார். துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி செய்தார். தொண்டர்களை மதிப்பது இல்லை. எங்கள் வலியே புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்கிறார்.அவர் மீண்டும் போட்டியிட 'சீட்' தர கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பீதரில் பா.ஜ., கூட்டம் நடந்தது. மாநில தலைவர் விஜயேந்திரா பங்கேற்றனர். மத்திய அமைச்சர் பகவந்த் கூபா, எம்.எல்.ஏ., பிரபு சவுஹானும் பங்கேற்றனர். மேடையில் பேசி கொண்டிருந்த பிரபு சவுஹான், திடீரென தனது பேச்சை நிறுத்திவிட்டு, விஜயேந்திரா அருகில் வந்தார். “பகவந்த் கூபாவுக்கு மீண்டும் 'சீட்' தராதீங்க,” என்று கூறி, அவர் காலில் விழுந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.