உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 94 சதவீதம் குறைந்தது மொபைல் போன் கட்டணம்: ஜோதிராதித்ய சிந்தியா லோக்சபாவில் தகவல்

94 சதவீதம் குறைந்தது மொபைல் போன் கட்டணம்: ஜோதிராதித்ய சிந்தியா லோக்சபாவில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 2014 முதல் மொபைல் போன் கட்டணம் 94 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.லோக்சபாவில் எதிர்கட்சிகள் மொபைல் போன் கட்டணம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்ததாவது:நம் நாட்டில் 2014ல் 90 கோடி மொபைல் போன் சந்தாதாரர்கள் இருந்தனர். இன்று 116 கோடி மொபைல் போன் சந்தாதாரர்கள் உள்ளனர். கடந்த 2014ல் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தி வந்தனர். இன்று இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கட்டணங்களை கண்காணிப்பது அவசியம். போட்டியை ஊக்குவிக்கும் அரசின் கொள்கைகளை இந்த கட்டண குறைவுக்கு காரணம்.இந்த குறைவு, குறிப்பாக கிராமப்புறங்களில், மொபைல் போன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.மேலும் இது இணைய பயன்பாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுத்து, மேலும் பலர் டிஜிட்டல் சேவைகளை அணுகவும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்கவும் உதவியுள்ளது.தொலைதொடர்பு சேவைகள் அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்து வருகிறது.இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
பிப் 06, 2025 17:06

அபத்தமான பேச்சு. கட்டபம்.குறைந்ததற்கு காரணம் இவ்ச்ங்க இல்லை. உலகளாவிய தொழில் நுட்ப வளர்ச்சி. ஒரு நிமிஷத்துக்கு ஒரு ரூவா குடுத்து ISD கால்.பேசினவன் நான். இன்னிக்கி ஃப்ரீயா வீடியோ கால் உலகில் யாருடனும் பேச முடியுது. 2023, 2924 லிருந்து இப்போ எவ்வளவு அதிகமாயிருக்குன்னு பேசு மேன்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 17:33

அபத்தமான பேச்சு. கட்டபம்.குறைந்ததற்கு காரணம் இவ்ச்ங்க இல்லை. உலகளாவிய தொழில் நுட்ப வளர்ச்சி. இதே அடிமைகள் கட்டணக்குறைவுக்கு ஆ ராசாதான் காரணம் உருட்டிக்கொண்டிருந்தது ஒரு காலம் ..... வெட்கமற்ற தற்குறிகள் .....


MUTHU
பிப் 06, 2025 21:14

உலகளாவிய தொழில் நுட்ப வளர்ச்சியினால்... ஒரு காரணம் இல்லை. அதற்கு முன் airtel வோடபோன் aircel வந்த கொள்ளை லாபத்தினை அப்படியே முதலீடுகளாய் வெளி நாடுகளுக்கு எடுத்து சென்றனர். JIO அம்பானி தன்னிடம் இருந்த ஐந்து லட்சம் கோடிகளை மூதலீடுகளாய் கொண்டு முற்றிலும் புதிய cable பதித்தார். அதன் பின்பே airtel விலை குறைத்தது.


முருகன்
பிப் 06, 2025 15:50

10 வருடத்தில் விலை உயர்ந்த பொருட்களை ஒப்பிட்டு பேசினால் நன்றாக இருக்கும்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 17:34

பத்து வருடங்களாக ஒரே சம்பளமா வாங்குகிறோம் ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை