வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறப்பு. புது கவச உடைகளை வடிவமைத்த டி ஆர் டி ஓ வுக்கும் ஐ ஐ டி க்கும் பாராட்டுகள். இஸ்ரேல் போன்ற தோழமை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
புதுடில்லி : ராணுவ வீரர்களை அனைத்து கோணங்களில் இருந்தும் பாதுகாக்கும் வகையிலான நவீன, எடை குறைந்த புல்லட் புரூப் ஜாக்கெட்டை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஐ.ஐ.டி., டில்லி இணைந்து வடிவமைத்துள்ளன. ஐ.ஐ.டி., டில்லியில் உள்ள டி.ஆர்.டி.ஓ., ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஜாக்கெட், 'போரான் கார்பைடு செராமிக், பாலிமர்' பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட்டை சோதனை செய்ததில், அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்துள்ளதாக டி.ஆர்.டி.ஓ., கூறியுள்ளது. ஏ.கே.,47 ரக துப்பாக்கியின் தோட்டாக்களை தாங்க, 8.2 கிலோ எடை உள்ள ஜாக்கெட்டும், நீண்டதுார ஸ்னைப்பர் தோட்டாக்களை தாங்க, 9.5 கிலோ எடையுள்ள ஜாக்கெட்டும் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிறப்பு. புது கவச உடைகளை வடிவமைத்த டி ஆர் டி ஓ வுக்கும் ஐ ஐ டி க்கும் பாராட்டுகள். இஸ்ரேல் போன்ற தோழமை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.