உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய - மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்பட கவர்னர்களுக்கு மோடி அறிவுரை

மத்திய - மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்பட கவர்னர்களுக்கு மோடி அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; மாநில கவர்னர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மாநில கவர்னர்கள் பங்கேற்ற இரு நாள் மாநாடு துவங்கியது.இதில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி பேசியது,ஒவ்வொரு மாநில கவர்னர்களும் மக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். மேலும் மத்திய அரசுக்கும், மாநிலத்துக்கும் இடையே பயனுள்ள பாலமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.ஜனாதிபதி திரவுபதி முர்சு பேசியதாவது,இந்த மாநாட்டில் மத்திய-மாநில உறவுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் பரந்த அளவிலான பிரச்சினைகளை விவாதிக்கும். இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களிலிருந்து நமது சிந்தனையில் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. .இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Gnanasekaran Vedachalam
ஆக 03, 2024 21:38

அவர்கள் தங்கள் பதவியின் மதிப்பு மரியாதை கண்ணியம் கடமை உணர்வு உணர்ந்து தமது பதவிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் மற்றவர்கள் என்ன புரிந்து புரிந்து கொள்கிறார்கள் நாம் பேசுவது ஒத்த கருத்து உடையதா தேவையான பொருத்தமான கருத்தை தெரிவிக்கோறோமா தன் பணியின் பொறுப்பை ஓட்டி பேசுகிறோமா என்பது மிக முக்கியம்.அரசியல் பண்ணுகிற பணி தன் பதவிக்கு உகந்தது இல்லை


venugopal s
ஆக 03, 2024 07:33

ஹா ஹா ஹா ஹா ஹா! செம காமெடி!


Kasimani Baskaran
ஆக 03, 2024 06:14

நாணயத்தில் அடுத்த பக்கம் மாநில அரசுகள். ஜனாதிபதியிடம் வேலை செய்யும் மத்திய அரசின் பிரதிநிதிகளை மாநில அரசு மரியாதையாக நடத்தவில்லை என்றால் அப்படிப்பட்ட அரசுகளை உடனே வீட்டுக்கு அனுப்புவது அவசியம். ஜனநாயகம் தெரியாதவர்களுக்கு ஜனநாயகப் பாடம் எடுப்பது வீண்.


Kulasekaran A
ஆக 03, 2024 05:07

இது R.N.ரவிக்கும் பொருந்துமா ?


தாமரை மலர்கிறது
ஆக 03, 2024 00:58

இந்தியா மற்றநாடுகள் போன்றது அல்ல. இந்தியாவில் உள்ள அரசியலமைப்பு சட்ட படி, மாநில அரசு வெறும் பொம்மை தான். முதல்வரின் அதிகாரம் ஒரு மேயரின் அதிகாரம் தான். அப்படி இருந்தும் திராவிட அடிவருடிகள் வானளாவிய அதிகாரம் இருப்பது போன்று துள்ளி குதிக்கிறார்கள். மாநில அரசுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் கூட இப்போது கிடையாது. வெறும் சொத்து வரியை மட்டும் தான் உயர்த்த முடியும். மற்றபடி மாநில அரசு வெறும் பொம்மை அரசு தான். மத்திய அரசுக்கு தான் அணைத்து உரிமைகளும் கடமைகளும் இந்திய சட்டத்தில் உள்ளது. ராணுவம், வெளிநாட்டு உறவு, பணம், ஏற்றுமதி இறக்குமதி, தொழில்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், வரி விதிக்கும் அதிகாரம் என்று அனைத்தும் உள்ளது. அதனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முதல்வர்கள் இருக்க வேண்டும். அதற்காக தான் கவர்னர் உள்ளார். கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் மேற்பாற்வையாளர். அவருக்கு முதல்வரை கட்டுக்குள் வைக்கும் அதிகாரம் உள்ளது. இந்திய சட்டமைப்புப்படி ஸ்டாலின் வெறும் தமிழ்நாட்டு மேயர் தான். ரொம்ப குதிக்க வேண்டாம். கெஜ்ரி நிலைமை தமிழக மேயருக்கு நிகழக்கூடும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை