உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீவிரவாதம் இல்லாத பாரதம்; மோடி அரசின் திட்டம்; அமித்ஷா உறுதி

தீவிரவாதம் இல்லாத பாரதம்; மோடி அரசின் திட்டம்; அமித்ஷா உறுதி

புதுடில்லி: தீவிரவாதம் இல்லாத பாரதத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய புலனாய்வு முகமை சார்பில் தீவிரவாத ஒழிப்பு மாநாடு இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. தேசிய பாதுகாப்பிற்கு தீவிரவாதத்தால் எழும் அச்சுறுத்தல்கள் குறித்தும், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருக்கின்றனர். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான வழக்கு விசாரணைகள், சர்வதேச சட்ட ஒத்துழைப்பு மற்றும் நுணுக்கங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளும், விவாதங்களும் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த மாநாடு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, தீவிரவாதம் இல்லாத பாரதத்தை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதியாக, தீவிரவாத ஒழிப்பு மாநாடு நடைபெறுவதாகவும் கூறியிருந்தார். மேலும், அனைத்து ஏஜென்சிகளின் உதவியுடன் நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bala
நவ 07, 2024 20:27

Terrorism must be eradicated from this country, that is the goal of Modi ji and proud Indians.


Ramesh Sargam
நவ 07, 2024 20:20

நம் நாட்டில் முதலில் தீவிரவாதம் முற்றிலும் ஒழியவேண்டுமென்றால், அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை ஒழிக்கவேண்டும்.


என்றும் இந்தியன்
நவ 07, 2024 17:22

இவர் முஸ்லிம்கள் இல்லாத பாரதம் என்று மிக மிக தெளிவாகக் கூறுவதாக திருட்டு திராவிடம் கூறவேண்டியது தானே என்ன மாயாண்டி ஜோசப் கான் சரிதானே


Amruta Putran
நவ 07, 2024 16:52

Terrorism should be eradicated from Country


Sridhar
நவ 07, 2024 14:52

என்ன நடவடிக்கையோ போங்க அங்க ஒரு ஆளு மீண்டும் மீண்டும் 15 நிமிசம் போலீச நிறுத்திவையுங்க 100 கோடி இந்தியர்களை அந்த நேரத்தில் கொன்று காமிக்கிறோம்னு சவால் விட்டுட்டு இருக்கான், அவன் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கும்பல் பெரும் ஆரவாரத்தோடு அதை கைதட்டி ஆமோதிக்கிறது. இந்த விவரம் தெரிந்த மக்கள் எல்லாரும் ஒருவித கிலியில் இருக்கிறார்கள். அந்த கும்பலின் சரித்திரத்தை பார்த்தால், ஏற்கனவே இதேபோன்ற செயல்களை பலமுறை செய்து காட்டியவர்கள் எனும் நிலையில், அரசு இது சம்பந்தமாக ஒரு நடவடிக்கையும் எடுக்காததுடன், இந்த சம்பவம் நடந்ததையே ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போவதை பார்க்கும்போது, இந்த செய்தியின் தலைப்பை பார்த்தால் சிரிப்புதான் வரும்


புதிய வீடியோ