உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார்கேயிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த மோடி

கார்கேயிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த மோடி

புதுடில்லி: தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்த கார்கே உடல் நலம் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசரித்தார் பிரதமர் மோடி.ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி மூன்றாம் கட்ட ஒட்டுப்பதிவு வரும் அக.01-ல் நடக்கிறது. இங்கு கதுவா மாவட்டத்தில் காங்.வேட்பாளர்களை ஆதரித்து காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரசாரம் செய்தார். அப்போது பிரசார மேடையில் திடீரென மயங்கி விழுந்தார்.இது குறித்து தகவலறிந்து பதறிப்போன பிரதமர் மோடி, உடனே தொலைபேசி வாயிலாக கார்கேயை தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது மோடியை பிரதமர் நாற்காலியிலிருந்து அகற்றும் வரை சாகமாட்டேன் என ஆவேசமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. பேசிய பின்னர் தான் தான் மயங்கி விழுந்தார் கார்கே.தன்னை விமர்சித்தாலும் அரசியல் நாகரீகம் கருதியும், எதிர்கட்சி தலைவர் என்ற முறையிலும் கார்கேயின் உடல் நலம் குறித்து விசாரித்தார் மோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

saravanan
செப் 30, 2024 18:27

காங்கிரஸ்காரரான கார்கே மனதில் பிரதமர் மோடி மீது ஆத்திரமும், காழ்புணர்ச்சியும் இருக்கும் அளவுக்கு தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு செப்பனிட்டுக் கொண்டது போல தெரியவில்லை


NS நாயுடு
செப் 30, 2024 17:19

மோடியை திட்டித் திட்டியே, கார்கேயின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. பாவம், வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கிறார்..


giddy
செப் 30, 2024 08:34

நலம் விசாரித்த பிரதமருக்கு கார்கே அளித்த பதிலையும் பதியவும். . எப்பேர்பட்ட எதிர் கட்சி தலைவரா இருக்கார்...


sankar
செப் 30, 2024 06:11

இவர்தான் மனிதர். அவர் பேசுவது அந்த குடும்பத்தை மகிழ்விக்க என்கிற விஷயம் தெரிந்தவர்.


Sivakumar
செப் 30, 2024 08:53

அப்படினா JP நட்டா பேசுவது யாரை மகிழ்விக்க பாஸ் ?


vadivelu
செப் 30, 2024 09:42

எந்த மன்னர் குடும்பத்திற்கு என்று நீங்கதான் சொல்லணும்


R K Raman
செப் 30, 2024 00:21

மாமனிதர்


சிவா அருவங்காடு
செப் 29, 2024 23:51

கார்கே ....உங்களுக்கு ஆவேசம் ஆகாது. அந்த தகுதியும் இல்லை. நீங்கள் ராகுல் குடும்ப அடிவாங்கி..... அவ்வளவுதான்.


vijai
செப் 29, 2024 23:43

அது தான் மோடி கிரேட்


கிஜன்
செப் 29, 2024 23:34

நல்லா ஏத்தி விட்ருக்காங்க .... ஹை பிட்ச்ல பேசி .... ....அத வச்சு அனுதாப ஒட்டு வாங்கலாம்ன்னு ஒரு திட்டம் போல .... சுவர் இருந்தா தான் சுண்ணாம்பு அடிக்க முடியும் ...


மோடி தாசன்
செப் 29, 2024 23:27

மேன் மக்கள் மேன் மக்களே. நாகரீகத்தின் உச்சம் மோடிஜி பண்பின் உச்சம் மோடிஜி இன்னார் செய்தார் ஒருவர் அவர் நான நன்னயம் செய்தல் வேண்டும் என்ற குறளுக்கு ஏற்ப வாழும் மோடிஜி வாழ்க பல்லாண்டு


Kasimani Baskaran
செப் 29, 2024 22:43

மோடி மனிதர்களை மதிப்பவர் என்று சிறு பிள்ளைக்குக்கூட தெரியும். ஆனால் கார்கேதான் அந்த வகையறாவே கிடையாதே. ஏன் மதிக்க வேண்டும்.


புதிய வீடியோ