உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அஜ்மீர் தர்காவிற்கு மலர் போர்வை வழங்கிய மோடி

அஜ்மீர் தர்காவிற்கு மலர் போர்வை வழங்கிய மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் நடக்கும் உருஸ் விழாவுக்கான மலர் போர்வையை பிரதமர் நரேந்திர மோடி காணிக்கையாக வழங்கினார்.ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள புகழ்பெற்ற தர்காவில், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொன்னுதீன் சிஸ்தியின் நினைவிடம் உள்ளது. உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களால், காஜா கரிபுன்நவாஸ் என அழைக்கப்படும் அவரது நினைவு தினத்தை கடைப்பிடிக்கும் வகையில் ஆண்டுதோறும் இங்கு lநடத்தப்பட்டு வரும் உருஸ் எனப்படும் சந்தனக் கூடு விழா இந்தாண்டு (ஜன.04) நடக்கவுள்ளது. இவ்விழாவில் பயன்படுத்துவதற்கான, 'சதார்' எனப்படும் மலர் போர்வையை பிரதமர் நரேந்திர மோடி, அஜ்மீர் தர்கா நிர்வாகிகளிடம் காணிக்கையாக வழங்கினார். நாளை (ஜன.04) அஜ்மீர் தர்கா நிர்வாகத்திடம் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முறைப்படி ஒப்படைக்கிறார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி