உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அஜ்மீர் தர்காவில் உருஸ் விழா மலர் போர்வை வழங்கிய மோடி

அஜ்மீர் தர்காவில் உருஸ் விழா மலர் போர்வை வழங்கிய மோடி

புதுடில்லி, ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் நடக்கும் உருஸ் விழாவுக்கான மலர் போர்வையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணிக்கையாக வழங்கினார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள புகழ்பெற்ற தர்காவில், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொன்னுதீன் சிஸ்தியின் நினைவிடம் உள்ளது. உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களால், காஜா கரிபுன்நவாஸ் என அழைக்கப்படும் அவரது நினைவு தினத்தை கடைப்பிடிக்கும் வகையில் ஆண்டுதோறும் இங்கு உருஸ் எனப்படும் சந்தனக் கூடு விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு, கடந்த 8ல் துவங்கி வரும், 21 வரை விழா நடக்கிறது.விமரிசையாக நடக்கும் இந்த விழாவின் போது, அவரின் நினைவிடத்தின் மீது மலர் போர்வைகளை வைத்து வணங்குவதை முஸ்லிம் மற்றும் ஹிந்து மதத்தினர் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு நடக்கவுள்ள விழாவில் பயன்படுத்துவதற்கான, 'சதார்' எனப்படும் மலர் போர்வையை பிரதமர் நரேந்திர மோடி, அஜ்மீர் தர்கா நிர்வாகிகளிடம் நேற்று காணிக்கையாக வழங்கினார்.அப்போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பா.ஜ., சிறுபான்யினர் பிரிவு தலைவர் ஜமால் சித்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை